Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் வாகன ஓட்டிகளுக்கு பெரிய குட்நியூஸ்.. போக்குவரத்து விதிமீறல்.. நாளை முதல் 50 சதவீத சலுகை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பதிவான வழக்குகளில் வாகன ஓட்டிகள் 50 சதவீத சலுகையுடன் அபராத தொகையை நாளை (சனிக்கிழமை) முதல் செலுத்தலாம் என்று பெங்களூர் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு பெங்களூருவில் 2 முறை இதுபோன்று 50 சதவீத சலுகையுடன் அபராத தொகை செலுத்த வாகன ஓட்டிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அப்போது பல கோடி ரூபாய் அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதேபோல் வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நகரம் ஆகும். அதாவது இந்தியாவிற்கே ஐடி தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு நிறுவனங்களும், பல லட்சம் வெளிமாநிலத்தவர்கள் அதில் வேலையும் செய்கிறார்கள். இதன்காரணமாக பெங்களூரில் மக்கள் தொகை கோடிகளை தாண்டிவிட்டது. வாகனங்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகம் ஆகும்.

Big good news for Bangalore motorists 50 percent discount on traffic violations from tomorrow

பெங்களூர் வாகனங்கள்

பெங்களூரில் சுமார் ஒன்றே கால் கோடி வாகனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெங்களூரில் உள்ள நகர சாலைகள் அந்த அளவிற்கு வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகள் அல்ல.. ஒரே நேரத்தில் பல ஆயிரம் வாகனங்கள் வந்து செல்வதால் நெரிசல் எப்போதுமே அதிகம் ஆகும். பெங்களூர் எப்படி ஐடி நிறுவனங்களுக்கு புகழ் பெற்றதோ, அதேபோல் அதன்டிராபிக் உலகப்புகழ் பெற்றது. ஏனெனில் அந்த அளவிற்கு பீக் அவர்ஸில் நெரிசல் இருக்கும்.

விதிமீறல் புகார்கள்

இதன்காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளையும் மீறி செல்வது அதிகமாக இருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், சிக்னலை மதிக்காதது, தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது என தினமும் ஆயிரக்கணக்கான வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெங்களூரை பொறுத்தவரை ஏஐ சிக்னல்கள் ஆகும். அதாவது சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவாகும் வழக்குகளில் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். அதேநேரம் போக்குவரத்து போலீசார் சிறப்பு சோதனை நடத்தி, அவ்வவ்போது வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராத தொகையை மொத்தமாக வசூலிக்கின்றனர்.

500 போதும்

ஆனாலும் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது பதிவான வழக்குகளில பல கோடி ரூபாய் அபராதம் செலுத்தாமல் உரிமையாளர்கள் சுற்றி வருகின்றனர். அந்த வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸாக பெங்களூருவில் 50 சதவீத சலுகையுடன் அபராத தொகையை செலுத்துவதற்கு போலீஸ் துறை அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி விதிமுறைகளை மீறிய வாகனங்கள் மீது பதிவான வழக்குகளில் 50 சதவீத தொகையை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. குறிப்பாக ஒரு வாகன ஓட்டி மீது 2 வழக்குகளில் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டி இருந்தால், அவர் ரூ.500 மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 50 சதவீதம் சலுகை

முன்னதாக பெங்களூரில் 2 முறை இதுபோன்று 50 சதவீத சலுகையுடன் அபராத தொகை செலுத்த வாகன ஓட்டிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அப்போது பல கோடி ரூபாய் அபராதம் வசூல் ஆகி இருந்தது. வாகன ஓட்டிகள் தாமாக முன்வந்து 50 சதவீத சலுகையுடன் அபராதத்தை செலுத்தி, தங்களது வாகனங்கள் மீது இருந்த வழக்குகளில் இருந்து விடுபட்டு இருந்தனர். அதுபோல், நாளையில்(சனிக்கிழமை) இருந்து அடுத்த மாதம்(செப்டம்பர்) 12-ந் தேதி வரை 50 சதவீத சலுகையுடன் அபராத தொகை செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையும் பல கோடி ரூபாய் அபராதம் வசூலாகும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+