Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவமானப்படுத்துறாங்க.. இந்தி பேசுவது தப்பா?கன்னடர்களுக்கு எதிராக பீகார் இளைஞர் வீடியோ!பரபர பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாக வதந்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் தான் பெங்களூரில் உள்ள கடையில் வேலை செய்யும் பீகார் இளைஞர் பரபரப்பான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‛‛இந்தி பேசுவதால் கன்னடம் பேசும் மக்கள் அவமானப்படுத்துகிறார்கள். என்னை கொல்லுங்கள்'' என கதறுகிறார். இது பெரிய பிரச்சனையான மாறிய நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலியாக செய்திகள் பரப்பப்பட்டன. குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் குறிவைத்த தாக்கப்படுவதாக வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு வதந்தியாக பரப்பப்பட்டது. இந்த விவகாரம் பீகார் சட்டசபையில் எதிரொலிக்கவே அம்மாநில அரசு அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது.

Bihar youngster alleges language based harassment in Bengaluru and video releases

இந்த குழு தீவிர விசாரணை நடத்தியது. அப்போது தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழு தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியது. மேலும் தமிழ்நாட்டில் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவரால் பெங்களூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதில் இளைஞர் ஒருவர் பேசுகிறார். அவர் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர் என அறிமுகம் செய்கிறார். மேலும் பெங்களூரில் இந்தி பேசும் மக்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார் என அவர் குற்றம்சாட்டியது தான் இதற்கு காரணமாகும்.

இதுதொடர்பாக அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோவில், ‛‛நான் பீகாரின் முசாபர்பூரைச் சேர்ந்தவன். நான் பெங்களூரில் உள்ள உணவகத்தில் வேலை செய்கிறேன். இங்கு வருபவர்களுக்கு இந்தி பேசுவதால் பிரச்சனை ஏற்படுகிறதாம். அவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்? கருணையின்றி கொன்று விடுவார்களோ? எல்லாருமே அவமானப்படுத்துகிறார்கள். இழிவுபடுத்துகிறார்கள். கர்நாடகாவில் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு அரசு நீதி வழங்க வேண்டும்'' என்றார்.

மேலும், ‛‛உணவு சாப்பிட வந்தவர்களுக்கு நான் பரிமாறுகிறேன். ஆால் இந்தி பேசும் பீகார் நபராக இருப்பது என்ன குற்றமா? நாமும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே?. இப்போது நான் சவால் விடுக்கிறேன். வாருங்கள். இப்போது வந்து என்னை கொல்லுங்கள். சாக நான் தயாராக இருக்கிறேன்'' என அந்த நபர் கதறியபடி கூறினார். மேலும் இந்த வீடியோவை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Bihar youngster alleges language based harassment in Bengaluru and video releases

இந்த வீடியோ பிற இணையதளங்களில் வேகமாக பரவியது. பலரும் பெங்களூரில் இந்தி பேசும் பீகார் இளைஞர் துன்புறுத்தப்படுவதாக கூறினார். அதேவேளையில் பீகார் இளைஞரின் குற்றச்சாட்டை பெங்களூரில் வசிக்கும் கன்னடர்கள் மறுத்தனர். இதுதொடர்பாக இணையதளங்களில் விவாதங்கள் தொடங்கின. இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையின்போது அந்த நபரின் பெயர் நிதிஷ் குமார் யாதவ் என்பதும் அவர் பெங்களூரில் தங்கி வடக்கு பகுதியில் தங்கி உணவகத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் சமீபத்தில் ஓட்டலில் சாப்பிட்டவர்களுக்கும், இவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இப்படி வீடியோ வெளியிட்டுள்ளார். இது மொழி சார்ந்த பிரச்சனை இல்லை. மாறாக உணவு பிரச்சனை தொடர்பானது என பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறினார்.

Bihar youngster alleges language based harassment in Bengaluru and video releases

மேலும், மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக போலீசில் கூற வேண்டும். இல்லாவிட்டால் 112 என்ற எண்ணை அழைக்க வேண்டும். இதனை செய்தால் அடுத்த 30 நிமிடத்தில் போலீசாரின் உதவி கிடைக்கும். இதுபோன்று சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட வேண்டாம். இது தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும். பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் அனைத்து மொழி பேசும் மக்களும் ஒன்றாக தான் வசித்து வருகின்றனர் என பிரதாப் ரெட்டி கூறினார்.

இதுகுறித்து பெங்களூர் சுப்பிரமணியநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் கடந்த 7 ம் தேதி நடந்துள்ளது. அதன்பிறகு வீடியோ வெளியிட்ட நபர் சொந்த ஊர் சென்றுவிட்டார். அவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+