பட்ஜெட் வஞ்சகம்: தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோருமா? தேசதுரோக செயல்- வரிந்து கட்டி பாயும் பாஜக!
பெங்களூர்: மத்திய பட்ஜெட்டில் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதால் தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோரும் என கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் பேசியிருப்பதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ், கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.பி. டிகே சுரேஷ் இது தொடர்பாக கூறியதாவது; தென்னிந்திய மாநிலங்கள் மூலமான வரி வருவாயை மத்திய பாஜக அரசு வட இந்திய மாநிலங்களுக்கு குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களுக்குதான் அள்ளி கொடுக்கிறது. இந்த நிலைமை நீடிக்கக் கூடாது.

மத்திய அரசால் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை நீடித்தால் அத்தனை தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும். எங்களிடம் வரி வசூல் செய்கிறது மத்திய அரசு. அப்படியானால் எங்களுக்கான உரிய பங்கைத்தான் தர வேண்டும். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தென்னிந்தியாவுக்கு அநீதிதான் மத்திய அரசு இழைத்து கொண்டே இருக்கிறது என குமுறி இருந்தார்.
டிகே சுரேஷ் எம்பியின் இந்த கருத்துக்கு கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜயேந்திரா கூறுகையில், தென்னிந்தியா தனிநாடு கோரும் என்ற கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவேன் என உறுதிமொழி கொடுத்த ஒரு எம்பி இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கர்நாடகாவுக்கு ரூ60,000 கோடிதான் கொடுத்தது. 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் ரூ 2 லட்சம் கோடி கொடுத்தது என்பதை டிகே சுரேஷ் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
'இந்தி பெல்ட்’தான் இந்தியாவா? தென்னிந்தியா புறக்கணிப்பு.. தனிநாடு கோரிக்கை குறித்து டிகே சிவகுமார்
கர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் கூறுகையில், தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோரும் என டிகே சுரேஷ் எம்பி பேசியிருப்பது தேசதுரோக செயல். அரசியல் சாசனத்தை அவமதிப்பதும் இழிவுபடுத்துவதுமாகும். தேசதுரோக செயலுக்காக காங்கிரஸை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் சதியை மக்கள் முறியடிப்பார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications