கர்நாடகா: முந்தைய காங்-மஜத ஆட்சியை கவிழ்த்ததில் சித்தராமையாவுக்கும் பங்கு- கொளுத்தி போடும் பாஜக
பெங்களூரு: கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததில் தற்போது முதல்வர் பதவிக்கு முன்னணியில் நிற்கும் சித்தராமையாவுக்கும் பங்கு இருக்கிறது என்கிறது பாஜக.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் இருவருமே முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கர்நாடகா மாநில தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சித்தராமையாவுக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை கர்நாடகா பாஜக முன்வைத்து வருகிறது. குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதற்கு 17 எம்.எல்.ஏக்கள் காரணமாக இருந்தனர். அவர்களில் ஒருவர் தற்போதைய பாஜக மூத்த தலைவர் சுதாகர். முந்தைய ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக சுதாகர் கூறியதாவது: 2018-ம் ஆண்டு எம்.எல்.ஏக்கள் தங்களது குறைகளை கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சித்தராமையாவிடம் தெரிவித்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் சித்தராமையா தம்மால் எதுவும் செய்ய இயலாது என கைவிரித்தே வந்தார். தமது தொகுதியிலேயே கூட மஜத- காங்கிரஸ் அரசு எந்த ஒரு பணியும் செய்யாமல் முடக்கி வைத்துள்ளது எனவும் குமுறியிருந்தார். 2109-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் வரை சித்தராமையா காத்திருந்தார். அதற்கு பிறகு ஒருநாள் கூட காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு நீடிப்பதை சித்தராமையா விரும்பாமல் கவிழ்ப்பதில் குறியாக இருந்தார். காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி கவிழ்வவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் போவதற்கும் தாம் உடந்தையாக இல்லை என்பதை சித்தராமையா மறுக்க முடியுமா?. இவ்வாறு சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவின் இந்த கேள்விகள், முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் இருக்கும் சித்தராமையாவுக்கு நெருக்கடி தரக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications