அதிர்ந்து போன பெங்களூர்.. பெண் ஊழியரை பலாத்காரம் செய்த மேனேஜர்.. எப்படி ஏமாற்றினார் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 32 வயது பெண்ணை ஏமாற்றி மேனேஜர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் அலுவலகங்களில் ஒன்றாக பணியாற்றும் சூழல் உள்ளதால் பாலின பாகுபாடு இன்றி அனைவரும் நட்பாக பழகுவது இயல்பான ஒன்றாகும்.

இருப்பினும் கூட சிலர் இந்த நட்பை தவறாக பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சிதைத்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் பசவேஸ்வரா நகரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் மேனேஜராக கேஆர் புரத்தை சேர்ந்த சையத் அக்ரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் 32 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் 2024ம் ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாள் சையத் அக்ரம் அந்த பெண்ணிடம் பேசினார். அப்போது அவர் புத்தாண்டுக்கு பார்ட்டி தருகிறேன். வாருங்கள் ஹோட்டல் சென்று சாப்பிட்டு வரலாம் என டிசம்பர் 31ம் தேதி அழைத்துள்ளார்.
ஆபாசத்தின் உச்சம்! ஓடும் ரயிலில் அலறிய இளம்பெண்.. 47 வயது நபர் செய்த அருவருப்பான செயல்.. அதிரடி கைது
இதையடுத்து அந்த பெண்ணும் அவருடன் பைக்கில் ஏறி அமர்ந்து பயணித்தார். இந்த வேளையில் சையத் அக்ரம் அவரை ஹோட்டலுக்கு அழைத்து செல்லாமல் ரூட்டை மாற்றினார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, தனது வீட்டில் சிறிய வேலை உள்ளது. அதனை சில நிமிடங்களில் முடித்துவிட்டு ஹோட்டல் செல்லலாம் என தெரிவித்தார். இதையடுத்து பெண் ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்ற சையத் அக்ரம் அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சையத் அக்ரம் வீட்டு கதவை பூட்டியிருந்ததால் அவரால் வெளியே போகமுடியவில்லை. இதனால் அவர் கூச்சலிட்டார். இந்த வேளையில் வாயை பொத்திய சையத் அகமது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு, சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
‛‛மோடி போஸ்டரை நான் ஏன் பிடிக்கனும்’’.. மறுத்த பஞ்சாயத்து தலைவி பரிதா பேகம்! கொதித்துப்போன பாஜக
இதனால் அந்த பெண் ஊழியர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கணவர் உள்பட யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அதன்பிறகு கடந்த 2ம் தேதி அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் கூறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அவரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கணவரின் உதவியுன் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் சம்பவம் குறித்து பசவேஸ்வரா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது சையத் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications