பட்ஜெட் வஞ்சகம்:தென்னிந்தியா ’தனிநாடு’ கோரும் நிலைமை ஏற்படும்- கர்நாடகா காங். எம்பி பகீர் குரல்!
பெங்களூர்: தென்னிந்திய மாநிலங்களை மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் புறக்கணித்திருப்பதால் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும் என கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ் எச்சரித்திருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று லோக்சபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.பி. டிகே சுரேஷ் இது தொடர்பாக கூறியதாவது; தென்னிந்திய மாநிலங்கள் மூலமான வரி வருவாயை மத்திய பாஜக அரசு வட இந்திய மாநிலங்களுக்கு குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களுக்குதான் அள்ளி கொடுக்கிறது. இந்த நிலைமை நீடிக்கக் கூடாது.
மத்திய அரசால் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை நீடித்தால் அத்தனை தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும். எங்களிடம் வரி வசூல் செய்கிறது மத்திய அரசு. அப்படியானால் எங்களுக்கான உரிய பங்கைத்தான் தர வேண்டும். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தென்னிந்தியாவுக்கு அநீதிதான் மத்திய அரசு இழைத்து கொண்டே இருக்கிறது,
கர்நாடகா மாநிலமானது ரூ4 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசு எங்களுக்கு எவ்வளவு திருப்பித் தருகிறது? நாட்டின் 16-வது நிதிக் குழு இது குறித்து கவனம் செலுத்தாமல் போனால் தென்னிந்திய மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பவே செய்வார்கள். இவ்வாறு டிகே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் வஞ்சகம்: தென்னிந்திய மாநிலங்கள் தனிநாடு கோருமா? தேசதுரோக செயல்- வரிந்து கட்டி பாயும் பாஜக!
கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷின் இந்த கருத்து பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. கர்நாடகா பாஜக தலைவர்கள் டிகே சுரேஷின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரர்தான் டிகே சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications