கர்நாடகா- மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவைகள் திடீரென ரத்து.. பேருந்து தாக்கப்பட்டதால் பதற்றம்
பெங்களூர்: கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையேயான பேருந்து சேவைகள் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகாவின் பெலகாவி அருகே ஒரு மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பேருந்து சேவைகள் இரு மாநிலங்களுக்கு இடையே தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையோரத்தில் இருக்கும் பெலகாவி மாவட்டம் கர்நாடகாவுக்கு சொந்தமானது ஆகும். இங்கு மராத்தி பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர்.அதேபோல் கன்னடம் பேசும் மக்களும் உள்ளனர். மராத்தி பேசும் மக்கள். பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு அங்கு வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.இந்த விவகாரத்தில் இரு மாநில அரசு தலைவர்களுமே அந்தந்த மாநிலங்களுக்கு ஆதரவாக பலமுறை போராட்டங்களும் நடத்தியுள்ளனர். அவ்வபோது மராத்தி, கன்னடா மொழி தொடர்பாக பிரச்சனைகள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கர்நாடகா அரசு பேருந்தில் பணிபுபுரியும் மல்லப்பா ஹுக்கேரி என்ற நடத்துனர் பெலகாவி அருகே சுலேபாவி கிராமத்தில் கன்னடத்திற்கு பதில் மராத்தி பேசச்சொல்லி தாக்கப்பட்டுள்ளார். இதுபற்றி நடத்துனர் கூறும் போது, சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் ஏறினார். அவர் மராத்தியில் பேசினார். நான் 'எனக்கு மராத்தி தெரியாது, கன்னடத்தில் பேசுங்கள்' என்று நான் கூறினேன். மராத்தி தெரியாது என்று சொன்னதும் என்னை அவமானப்படுத்திய அந்த பெண், நான் கட்டாயம் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது திடீரென அங்கிருந்த பலர் ஒன்று கூடி என்னை சரமாரியாக தாக்கினார்கள் " என்றார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் 14 வயது சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்துநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 14 வயது சிறுமி, நடத்துநர் தனக்கு எதிராக அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். போக்சோ வழக்கு தொடர்பாக இன்னும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைக்கு பிறகே கைது பற்றி முடிவு செய்வோம் என்று போலீசார் கூறினார்கள்.
இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பெங்களூரிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநில அரசு பேருந்து வெள்ளிக்கிழமை இரவு கன்னட மொழி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. ஓட்டுநர் பாஸ்கர் ஜாதவின் முகத்தில் கருப்பு மை பூசி தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் நடந்ததை மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர்நாயக் உறுதி செய்துள்ளார். மேலும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வரை பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று அமைச்சர் சர்நாயக் கூறினார்.
இதனிடையே காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் கர்நாடகாவில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி செல்லும் அரசு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து செல்லும் பேருந்துகள் பெலகாவி மாவ்டடம் நிப்பானி தாலுகாவில் உள்ள கோக்னோலி (எல்லை) வரை சென்று வருகின்றன. அதேபோல் மகாராஷ்டிரா மாநில பேருந்துகளும் கோக்னோலி வரை தான் சென்று வருகின்றன.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications