பெங்களூரில் பிரபல பெண் ஆடை வடிவமைப்பாளருக்கு காதல் தொல்லை.. இவிபி பிலிம் சிட்டி நிறுவனர் மீது வழக்கு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ள அந்த பெண், சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபரான சந்தோஷ் ரெட்டி என்பவர் என்பது காதல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர்வருகிறார். அவருக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் பிரபல ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார். இந்த நிலையில், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் சென்னையை சேர்ந்த தொழில்அதிபரான சந்தோஷ் ரெட்டி மீது அவர் புகார் அளித்துள்ளார்.

தொழில் அதிபரான சந்தோஷ் ரெட்டி யார் என்றால், சென்னை அருகே இ.வி.பி. பிலிம் சிட்டி என்ற திரைப்பட நகரின் உரிமையாளர் ஆவார். அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் கூறுகையில், "நான் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறேன். எனக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் அதிபரான சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகம் ஆனார். அவரது உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஆடைகளை வடிவமைத்து கொடுக்கும்படி கேட்டார். அதுவும் அவரது மகள் மூலமாக தான் என்னை தொடர்பு கொண்டார். அதன்பிறகு நாங்கள் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு நல்ல நண்பர்களாக இருந்தோம்
முதலில் குடும்ப நண்பர்களாக தான் பழகி வந்தோம். எனது வீட்டுக்கு சந்தோஷ் ரெட்டி வந்து சென்றார். அப்போது எனது தொழிலுக்காக அவர் பணம் முதலீடு செய்வதாக கூறினார். அத்துடன் அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படியும் என்னிடம் தெரிவித்தார். இதனால் எங்களுக்குள் இருந்த நட்பு விரிவடைந்தது.
எனது வீட்டுக்கு வந்த சந்தோஷ் ரெட்டி, எனது மகள் என்னிடம் ஒரு நாள் பேசவே இல்லை. எனக்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார். நானும் அவரை சமாதானப்படுத்தினேன். பின்னர் திடீரென்று என்னை காதலிப்பதாக கூறினார். என்னையும், அவரை காதலிக்கும்படி கேட்டார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை தாக்கினார். மேலும் என்னை காதலிக்க வேண்டும், இல்லையெனில் 2 குழந்தைகளையும், உன்னையும் கொன்றுவிடுவேன் மிரட்டினார். எனவே சந்தோஷ் ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்" இந்த புகாரின் பேரில் வயாலிகாவல் போலீசார், சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் கூறுவது உண்மை இல்லையா என்பது போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அதேபோல் இந்த புகார் தொடர்பாக தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டி தரப்பில் விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications