காவிரி: நாளை மறுநாளும் பந்த்! போச்சு ரூ4,000 கோடி..தலையில் துண்டை போட்டு கதறும் கர்நாடகா தொழில்துறை!
பெங்களூர்: காவிரி பிரச்சனைக்காக நேற்று பெங்களூர் பந்த் நடத்தப்பட்டது; இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (செப்டமப்ர் 29) கர்நாடகா பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் 2 முறை முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதால் சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக கர்நாடகா தொழில்துறையினர் கதறி உள்ளனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதனையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவின் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், கன்னட விவசாய அமைப்புகள், கன்னட இனவாத அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. மண்டியா மாவட்டத்தில் செப்டமப்ர் 23-ந் தேதி பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் பந்த் போராட்டம் நேற்று நடந்தது.
நாளை மறுநாள் பந்த்: இது போதாது என நாளை மறுநாள் (செப்டம்பர் 29) கர்நாடகா தழுவிய முழு அடைப்பு போராட்டம்- பந்த் நடத்தப்படும் என கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். கர்நாடகா தழுவிய பந்த் போராட்டத்துக்கு 2,000 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துவிட்டன என்கிறார் வாட்டாள் நாகராஜ்.
ரூ4,000 கோடி இழப்பு: கர்நாடகாவில் நேற்றும் நாளை மறுநாளும் நடைபெறும் பந்த் போராட்டத்தால் தொழில்துறையினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர். கொரோனா காலத்துக்குப் பின்னர் மீண்டு வந்த தொழில்துறையை இந்த முழு அடைப்பு போராட்டங்கள் முடக்கிப் போடுகிறது என்பது கர்நாடகா தொழில்துறையினரின் குமுறல். இந்தப் போராட்டங்களால் சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுமாம்.
720 நிறுவனங்கள் மூடல்: கர்நாடகாவில் அடுத்தடுத்து நடத்தப்படும் இந்த முழு அடைப்புப் போராட்டங்களால் சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது தொழில்துறையினரின் கதறல். கர்நாடகா தொழில் உரிமையாளர் சங்கத்தில் மட்டும் 720 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்புப் போராட்டங்களால் 720 நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அந்த அமைப்பினர்.
ஜிஎஸ்டி இழப்பு: மேலும் ஒருநாள் வர்த்தகம் முடங்கினாலே ஜிஎஸ்டி வரி என்பது ரூ100 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதில் வாரத்துக்கு 2 நாட்கள் முழு அடைப்புப் போராட்டம் என்பது அரசுக்குதான் பேரிழப்பாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஹோட்டல் தொழில்: கர்நாடகாவின் ஹோட்டல் சார்ந்த தொழில்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முழு அடைப்புப் போராட்டங்களால் நாள் ஒன்றுக்கு ரூ100 கோடி நஷ்டத்தை இந்த ஹோட்டல்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது அத்துறையினரின் குமுறல்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications