அடங்காத வாட்டாள் நாகராஜ்.. அக்டோபர் 10ல் கர்நாடகா-தமிழக எல்லையில் பந்த்! பரபர காவிரி போராட்டம்
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து வரும் 10ம் தேதி கர்நாடகா-தமிழக எல்லையில் பந்த் போராட்டம் நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இன்று கேஆர்எஸ் அணையை முற்றுகையிட ஊர்வலமாக செல்லும்போது இதனை அவர் கூறினார். இதனால் காவிரி போராட்டம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சனை உள்ளது. இந்த ஆண்டு காவிரி நீர் பிரச்சனை என்பது விஸ்வரூபமெடுத்துள்ளது. கர்நாடகாவில் மழையில்லை எனக்கூறி தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இருப்பினும் வேறு வழியின்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கி வருகிறது. தற்போதைய சூழலில் அக்டோபர் 15ம் தேதி வரை கர்நாடகா அரசு காவிரி ஆறு மூலம் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக்கூறி விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதன்படி தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பந்த், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மண்டியா, பெங்களூர், கர்நாடகா பந்த் போராட்டம் நடந்தது. இதனால் பெங்களூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான போக்குவரத்து என்பது தடைப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணையை முற்றுகையிட வாகனங்களில் சென்றனர். இந்நிலையில் தான் கேஆர்எஸ் அணை முற்றுகையிட புறப்படுவதற்கு முன்பு வாட்டாள் நாகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த கன்னட அமைப்பின் சார்பில் கேஆர்எஸ் அணை முற்றுகையிடப்பட உள்ளது. இதில் 100க்கும் அதிகமான கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணைக்கு வாகனங்களில் செல்கிறோம். இந்த ஊர்வலம் அமைதியாக நடக்க உள்ளது.

காவிரி விஷயத்தில் கர்நாடகா அரசின் நடவடிக்கை என்பது சரியாக இல்லை. இதனால் கர்நாடகா அரசை எச்சரிக்கையுடன வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அமைதியாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கூடாது. உடனே எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டி முடிவு எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளை புறக்கணிக்க கூடாது. கன்னட அமைப்புகள், மக்கள் கருத்தை புறக்கணிக்க வேண்டாம்.
மேலும் வரும் 10ம் தேதி (அக்டோபர் 10) தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் பந்த் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் பந்த் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டம் தீவிரமாக நடத்தப்பட உள்ளது. கர்நாடகாவுக்காகவும், கன்னட மொழிக்காவும் நான் இன்னும் ஏராளமான போராட்டங்களை தீவிரமாக மேற்கொள்ள உள்ளேன்.'' என்றார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications