நீங்க நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டுடன் சண்டை போட முடியாது: பாஜகவுக்கு டிகே சிவகுமார் பொளேர் பதிலடி!
பெங்களூர்: அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் காவிரி விவகாரத்தில் மோதல் போக்கை கர்நாடகா அரசு கடைபிடிக்க விரும்பவில்லை என பாஜகவுக்கு கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று டிகே சிவகுமார் கூறியதாவது: காவிரி பிரச்சனையில் புதிய பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரைக்கும் 10,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாம் கால அவகாசம் கோரியிருக்கிறோம். ஏனெனில் கர்நாடகா அணைகளில் நீர் பற்றாக்குறை இருக்கிறது.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுடன் இணைந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? தமிழ்நாட்டுக்காக நாங்கள் செயல்படுவதாக பாஜக, மஜத தலைவர் குமாரசாமி ஆகியோர் அர்த்தமற்ற, ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். காவிரி நீரை வைத்துக் கொண்டு தமிழ்நாடும் என்ன செய்யும்? விவசாயத்துக்குதானே பயன்படுத்தப் போகிறது? பாஜக, மஜத குற்றம்சாட்டுவதைப் போல தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறந்துவிடவே இல்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் திறந்துவிடப்பட்டது என்பதற்கான முழுமையான விவரம் எங்களிடம் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அதனை நாங்கள் வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.
கர்நாடகா விவசாயிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. அதற்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் பாஜக, மஜத கட்சிகள் என்ன செய்கின்றன? செய்தன? என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். நமது விவசாயிகளின் நலனுக்காக காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 23-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு பெற இந்த அரசு தயாராக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் நாம் மேல்முறையீடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து நாம் ஆலோசித்து முடிவு எடுப்போம். வறட்சி காலங்களில் நதிநீர் பங்கீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை விவாதித்து முடிவு செய்வோம். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications