3000 ஆபாச வீடியோ-ரேவண்ணா கைதை தொடர்ந்து பிரஜ்வலுக்கு வலை-ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை!
பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச படங்கள் எடுத்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மகன் பிரஜ்வலை கைது செய்வதற்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என சிபிஐக்கு கர்நாடகா மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (சி.ஐ.டி) பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக ஜேடிஎஸ் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கர்நாடகா மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் பெண் ஒருவரை கடத்தி சித்ரவதை செய்த புகாரின் அடிப்படையில் தேவகவுடாவின் மகனும் பிரஜ்வல் தந்தையுமான ரேவண்ணா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போதைய நிலையில் பிரஜ்வல், ரேவண்ணா இருவர் மீதும் தலா 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இருவர் மீதான அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 3 வழக்குகளாக்கப்பட்டுள்ளன. முதல் வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப் பெண்ணை பலாத்காரம் செய்தது, அவரது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது; மற்றொரு வழக்கு ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் கொடுத்த துப்பாக்கி முனையில் பிரஜ்வல் பலாத்காரம் செய்த வழக்கு. 3-வது வழக்கானது பெண்ணை கடத்தி ரேவண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் சித்ரவதை செய்தது தொடர்பானது.
இவ்வழக்குகளில் தற்போது ரேவண்ணா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிப் போனதால் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, சிபிஐக்கு மாநில சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. சிபிஐ விரைவில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications