2 துருவங்களான எடியூரப்பாவையும் டிகே சிவக்குமாரையும் இணைத்த சித்தார்த்.. கர்நாடக அரசியலில் டிவிஸ்ட்!
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் மாயம் காரணமாக தற்போது கர்நாடகாவில் அரசியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் மாயம் காரணமாக தற்போது கர்நாடகாவில் அரசியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த், வியாபார உலகில் கொடி கட்டி பறந்த இவர், பல்வேறு தரப்பில் இருந்து மோசமாக அரசியல் அழுத்தங்களை சந்தித்து இருக்கிறார். வருமானவரித்துறை இவரின் கழுத்தை பிடித்து பணம் கேட்காதது மட்டும்தான் மிச்சம்.
அந்த அளவிற்கு இவர் பாஜக ஆட்சியின் தொடக்கத்தில் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது இவரின் மாயம் கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன செய்தார்
விஜி சித்தார்த்தின் மாமனார் எஸ் எம் கிருஷ்ணா தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கர்நாடக முதல்வராகவும் இவர் இருந்துள்ளார். இப்போதும் கூட இவர் காங்கிரஸ் கட்சிக்கு மிக மிக நெருக்கமாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக கட்சி
அதன்பின் 2017ல் எஸ் எம் கிருஷ்ணா பாஜகவிற்கு சென்றார். பாஜக ஆட்சி தொடங்கிய போது சிசிடிக்கு நிறைய அழுத்தங்கள் வந்தது. அதேபோல் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு வேறு சில அழுத்தங்களும் இருந்தது. இதனால் அவர் பாஜகவிற்கு சென்றார். ஆனால், விஜி சித்தார்த் பெரிய அரசியல் தொடர்பு இல்லாமல் இரண்டு கட்சி உறுப்பினர்களுடன் பொதுவாக நெருக்கம் காட்டியே வந்தார்.

யாருக்கெல்லாம் நண்பர்
இவர் கர்நாடக அரசியலின் முக்கிய தலைகள் எல்லோருக்கும் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜகவின் எடியூரப்பா, சதானந்த கவுடா, காங்கிரசின் டி கே சிவக்குமார், மஜதவின் குமாரசாமி, எச்டி தேவகவுடா, ரேவண்ணா ஆகியோர் என்று முக்கிய தலைகள் எல்லோருக்கும் மிக நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். இவர்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு புள்ளி போல் இவர் இருந்தார்.

சென்றனர்
இந்த நிலையில் இவர் காணாமல் போய் உள்ள நிலையில் தற்போது எடியூரப்பா, சதானந்த கவுடா, காங்கிரசின் டி கே சிவக்குமார், மஜதவின் குமாரசாமி, எச்டி தேவகவுடா, ரேவண்ணா ஆகியோர் எஸ் எம் கிருஷ்ணா வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.டி கே சிவக்குமார், ரேவண்ணா இருவரும் காலையில் இருந்து எஸ் எம் கிருஷ்ணா வீட்டில்தான் இருக்கிறார்கள்.

என்ன சந்திப்பு
இவர்கள் அந்த வீட்டில் இருக்கும் போதுதான் புதிய முதல்வர் எடியூரப்பா அங்கே வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலையில் எடியூரப்பாவும், சிவக்குமாரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் இவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கர்நாடக அரசு கவிழ்ந்ததில் ஏற்பட்ட சண்டையை அடுத்து இவர்கள் முதல்முறை இன்றுதான் நேருக்கு நேர் பொது இடம் ஒன்றில் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications
