கழுத்தை நெரித்த வரி பிரச்சனை.. அதிகாரிகளின் தொந்தரவு.. சித்தார்த் மாயத்திற்கு திடுக்கிடும் காரணம்!
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் மாயத்திற்கு பின் அவருக்கு வருமான வரித்துறை அளித்த அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று மாலை காணாமல் போனார். நேற்று மாலை மங்களூர் நோக்கி சென்று கொண்டு இருந்த அவர் காணாமல் போனதை அடுத்து பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜி சித்தார்த் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் நேத்ராவதி ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இரண்டு பிரச்சனை
விஜி சித்தார்த்துக்கு மொத்தம் இரண்டு விதமான பிரச்சனைகள் தொல்லை கொடுத்து உள்ளது. அதன்படி மைன்ட் ட்ரீ என்ற நிறுவனத்தில் சித்தார்த் பங்குகளை வைத்து இருக்கிறார். இதில் 21% பங்குகளை மட்டும் இவர் விற்பதற்கு தீவிரமாக முயன்று வந்தார். கடைசியில் பிரபல எல் அன்ட் டி நிறுவனத்திடம் அதை விற்றார்.

என்ன சிக்கல்
இதில் இருந்து அவருக்கு நிறைய அழுத்தம் கொடுக்கப்பட்டது. பங்குகளை விற்றது தொடர்பாகவும், மீதமுள்ள பங்குகளை விற்க வேண்டும் என்று கூறியும் பலர் இவருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்த அழுத்தம்தான் இவர் இப்படி தவறான முடிவு எடுக்க முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

வருமான வரித்துறை
அதேபோல் இவர் தான் செலுத்த வேண்டிய வரியை விட குறைவான வரியை கட்டியதாக கூறப்படுகிறது. இவர் குறைவான வரி கட்டியதாக வருமான வரித்துறை பலமுறை இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இவரின் 100 கோடி ரூபாய் வரி மற்றும் சிசிடி நிறுவனத்தின் 40 கோடி ரூபாய் வரியையும் முடக்கி உள்ளது.

300 கோடி ரூபாய்
300 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டிய நிலையில் இவர் 43 கோடி ரூபாய்தான் வரி கட்டி இருக்கிறார். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் இவருக்கு மோசமாக எச்சரிக்கை விடுத்தனர். இந்த இரண்டு அழுத்தமும் சேர்ந்து, இவருக்கு பெரிய சிக்கலாகி அது இப்போது தவறான முடிவு எடுக்க முக்கிய காரணம் ஆனது என்கிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications