சந்திரயான் 3: "இந்த முறை மிஸ்சே ஆகாது.." இஸ்ரோ மேற்கொள்ளும் புதிய தந்திரம்.. முழு விவரம்!
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்தது. சந்திரயான் 3 வரும் 23ம் தேதி நிலவில் கால் பதிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, கடந்த 2019 ம் ஆண்டு சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2, 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருந்த போதிலும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது.

இருந்தாலும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்று வட்டப்பாதையை நிறைவு செய்த சந்திரயான் விண்கலம், நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் தற்போது பயணித்து வருகிறது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான்-3-ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில், நிலவின் 100 கிலோ மீட்டர் தொலைவிலான அடுக்குக்குள் 'சந்திரயான்-3' கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனிடையே, இன்று சந்திரயான் -3 திட்டத்தின் மிக முக்கிய பணி இன்று நடைபெற்றது. அதாவது, விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை இருந்து லேண்டர் தனியாக பிரிக்கும் நடவடிக்கை நேற்று நடந்தது. அதன்படி, விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. அதன்பிறகு இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கியது.
இந்த நிலையில், சந்திரயான் 3 வரும் 23ம் தேதி நிலவில் கால் பதிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறியதாவது:- சந்திரயான் 2 வில் பயன்படுத்தப்பட்ட வெற்றி அடிப்படையிலான வடிமைப்பில் இல்லாமல், கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து வடிவமைப்பு செய்து இணைக்கப்பட்டதே சந்திரயான் 3 விண்கலம். கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து எவ்வாறு பாடம் கற்று நிலவில் எப்படி விண்கலத்தை தரையிறக்குவது என்பதில் இந்த புதிய அனுகுமுறை கையாளப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்திற்கு தரையிறங்கும் பகுதி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்குமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு பரந்த நிலப்பரப்பில் தரையிறக்க திட்டமிடும் போது நிலைமை எப்படி அசாதாரமாக மாறினாலும், லேண்டர் பத்திரமாக தரையை தொடும். சந்திரயான் 2 வின் முக்கிய பிரச்சினை தரையிறங்கும் பகுதி குறைவான சுற்றளவு கொண்டதாக நிர்ணயிக்கப்பட்டதும், அதன் பிரேக் அமைப்பை கையாளும் திறன் மிக குறைவாக இருந்ததுமே காரணம்.

தற்போது தேவைப்பட்டால் மாற்று இடத்தில் தரையிறங்க செய்யவும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இதில் அதிகளவு எரிபொருள் பொருத்தப்பட்டுள்ளது. தரையிறங்கும் முன் லேண்டர் மற்றும் சந்திரயான் 3 விண்கலம் நிலாவின் தரையை படம் எடுத்து அனுப்பும் என்றும் தரையிறங்கும் இடத்தில் 30 செமீ அளவில் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்து வேறு இடத்தில் இறங்கும் தொழில்நுட்பமும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு மின் உற்பத்திய உறுதி செய்ய கூடுதல் சோலார்கள் பொருத்தப்பட்டுள்ளது. எந்த வித சூழ்நிலையிலும் விண்கலத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். எனவே உறுதியாக சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்பாடுகளை பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications