கை தர்பார்.. பாஜக ஷாக்! எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த தென்கர்நாடக டாப் தலைவர்! காங்கிரசுக்கு ஜம்ப்?
பெங்களூர்: சென்னபட்டனா தொகுதி வேட்பாளர் விவகாரத்தில் ஜனதா தளம்(எஸ்) மற்றும் பாஜகவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதற்கு இடையே தென் கர்நாடக முக்கிய தலைவரான சிபி யோகேஸ்வர் தனது எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். சென்னபட்டனா தொகுதியில் சுயேட்சையாகவும் போட்டியிடலாம் என சொல்லப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தாவக்கூடும் என்ற பேச்சும் அடிபடிபடுகிறது.
கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக உள்ள சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தக்கல் தொடங்கியுள்ளது. இதில், குமாரசாமி எம்.எல்.ஏவாக இருநத சென்னபட்டனா தொகுதி மிகவும் கவனம் பெற்றுள்ளது.

சென்னபட்டனா தொகுதியை கூட்டணியில் உள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பாஜக விட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் பாஜகவை சேர்ந்த சி.பி.யோகேஷ்வர் தனக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டும் எனக் கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளார். ஒருவேளை அவர் சுயேச்சையாக போட்டியிட்டால் அது மதசார்பற்ற கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அக்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.
ஆனால் பாஜகவின் பேச்சை கேட்கும் நிலையில் சி.பி.யோகேஷ்வர் இல்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், தான் தனது எம்.எல்.சி பதவியை யோகேஷ்வர் ராஜினாமா செய்து இருக்கிறார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் யோகேஷ்வர். முன்னாள் அமைச்சருமான யோகேஷ்வரின் முடிவு பாஜகவிற்கு அதிர்ச்ச்சியை கொடுத்துள்ளது. சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த யோகேஷ்வர், சுயேச்சையாக போட்டியிட தான் முடிவு செய்து இருப்பதாக கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் யோகேஷ்வர் சேரக்கூடும் என்ற யூகங்களும் கொடி கட்டி பறக்கின்றன. சென்னபட்டனா தொகுதியில் ஏற்கனவே பலமுறை எம்.எல்.ஏவாக இருந்த யோகேஸ்வர், இரண்டு நாட்களில் அடுத்த கட்ட முடிவு என்ன என்பதை அறிவிப்பதாகவும் கூறினார். சி.பி.யோகேஷ்வரை தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட வைக்க தயார் என்ற ரீதியில் குமாரசாமி சூசகமாக கூறியிருந்தார்.
ஆனால் பாஜக சின்னத்தில் மட்டுமே தான் போட்டியிடுவேன் என்று சிபி யோகேஸ்வர் திட்டவட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் சென்னபட்டனா தொகுதியில் தேர்தல் பணிகளை டிகே சிவக்குமார் நேரடியாக கண்காணித்து வருகிறார். இதனால், இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது.
ஜேடிஎஸ் கட்சி நிகில் குமாரசாமியை இந்த தொகுதியில் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் சிபி யோகேஸ்வர் சுயேட்சையாக போட்டியிட்டால் அது வாக்குகளை பிரிக்கும் என்பதோடு, காங்கிரஸ் கட்சிக்கு சாதகாமக களம் மாற வாய்ப்புள்ளது என்பதால் சிபி யோகேஸ்வரின் அடுத்த கட்ட மூவ் என்பது கர்நாடக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications