Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது அனுமன் பூமி.. திப்பு சுல்தான் சந்ததியினரை விரட்டி அடிங்க! கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

திப்பு சுல்தானின் வாரிசுகளை விரட்டி அடிக்க வேண்டும் என கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், திப்பு சுல்தானின் வாரிசுகளை விரட்டி அடிக்க வேண்டும் எனவும், ராமர் மற்றும் அனுமனின் வாரிசுகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் கட்டீல் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே அங்கு ஒன்றரை மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்.

அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது.

ஆட்சியை தக்க வைக்க போராடும் பாஜக

ஆட்சியை தக்க வைக்க போராடும் பாஜக

பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தி தாமரைக்கே வாக்களிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார்கள். குறிப்பாக கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை இந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வருகிறார்.

நளின் கட்டீல் பேச்சு

நளின் கட்டீல் பேச்சு

சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் பெற்ற அவர், கப்பால் மாவட்டம் எலபுர்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், "நாம் ராமர் மற்றும் அனுமனின் பக்தர்கள். நான் அனுமனை வளர்ப்போம். நாம் திப்புவின் ஆதரவாளர்கள் இல்லை. கர்நாடகா தேர்தல் முடிவை தொடர்ந்து திப்பு சுல்தானின் ஆதரவாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

திப்பு ஆதரவாளர்களை விரட்டியடிக்கனும்

திப்பு ஆதரவாளர்களை விரட்டியடிக்கனும்

திப்பு சுல்தானின் ஆதரவாளர்கள் வேண்டுமா? ராமர் மற்றும் ஹனுமனின் பக்தர்கள் வேண்டுமா? என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்வார்கள். மக்களாகிய நீங்கள் திப்பு சுல்தானை வழிபடுவீர்களா? அல்லது அனுமனை வழிபடுவீர்களா? எனவே நீங்கள் திப்பு சுல்தான் ஆதரவாளர்களை விரட்டியடிக்க வேண்டும்.

 கர்நாடகா அனுமனின் பூமி

கர்நாடகா அனுமனின் பூமி

இது அனுமனின் பூமி. திப்புவின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக்கூடாது. ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும்." என்றார். நளின் குமாரின் இந்த கருத்து மத வெறுப்பை தூண்டும் வகையில் அமைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.

தொடரும் சர்ச்சை பேச்சு

தொடரும் சர்ச்சை பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் "காங்கிரஸ் கட்சியினர் திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி தருகிறார்கள். இது நமது மாநிலத்திற்கு தேவையில்லாதது. விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் VS பாரதிய ஜனதா கட்சிகள் மத்தியில் போட்டி கிடையாது..

திப்பு சுல்தான் VS சாவர்க்கர்

திப்பு சுல்தான் VS சாவர்க்கர்

இந்த தேர்தல் திப்பு சுல்தான் சித்தாந்தம் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தங்களுக்கு இடையில்தான் நடைபெறுகிறது. நம் நாட்டிற்கு தேச பக்தர் சாவர்க்கரா தேவையா அல்லது திப்பு சுல்தான தேவையா? என்பது பற்றி விவாதிக்கலாம் வருமாறு சித்தராமையாவுக்கு நான் சவால் விடுக்கிறேன்." என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+