லீடர் சொன்னா கேட்க மாட்டியா? பள்ளி குடிநீரில் விஷம் ஊற்றிய மாணவன்.. சக மாணவர்களை கொல்ல ஸ்கெட்ச்
பெங்களூர்: கர்நாடகாவில் சக மாணவர்கள் தான் சொல்வதை கேட்காததால் ஆத்திரமடைந்த 5ம் வகுப்பு மாணவன் பள்ளியின் குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஹொசனகாரா தாலுகாவில் ஹுவினகொனோ கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11 வயது நிரம்பிய சிறுவன் 5ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த சிறுவன் மாணவர்களுக்கான தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் மாணவன் சொல்வதை பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள் கேட்பது இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் கோபமான 5ம் வகுப்பு மாணவன், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் விஷம் கலக்க முடிவு செய்துள்ளான்.அதன்படி இஞ்சி செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து பேக்கில் வைத்து பள்ளிக்கு எடுத்து வந்துள்ளான்.
அதன்பிறகு அந்த பூச்சிக்கொல்லி மருந்தை பள்ளியின் குடிநீர் தொட்டியில் கலந்துள்ளான். இதனை 2 மாணவர்கள் பார்த்துள்ளனர். அவர்களை கவனித்த மாணவன், சம்பவம் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளான். இதனால் அந்த மாணவர்கள் யாரிடமும் அதுபற்றி சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
இருப்பினும் குடிநீர் தொட்டியில் இருந்து மருந்தின் துர்நாற்றம் வீசியது. இதனை பள்ளியில் சமையலர் கண்டறிந்தார். மதிய உணவு சமைப்பதற்காக தண்ணீரை திறந்து பார்த்தபோது அதன் நிறம் மாறி இருந்தது. இதனால் ஏதேனும் தவறு நடந்துள்ளது என்று அவர் நினைத்தார். உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆசிரியர்கள் வந்து பார்த்போது பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தண்ணீரை யாரும் பயன்படுத்துவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதுகுறித்தபுகாரின் பேரில் போலீசார் சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பள்ளியில் ஏற்கனவே மாணவன் ஒருவன் தனது பள்ளி தோழனை பழிவாங்க கழிவறையில் இருந்த பினாயிலை தண்ணீர் பாட்டிலில் ஊற்றி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த பாணியில் தற்போது குடிநீர் தொட்டியில் இந்த 5ம் வகுப்பு மாணவன் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications