கர்நாடக தேர்தலில் நடக்கப்போகும் “மேஜிக்”.. காங்கிரஸ் எடுத்த “ஆயுதம்” -ராகுலுடன் அணிவகுத்த கன்னடர்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் பெரும் வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் தலித் மக்களை கவரும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். தற்போது அவர் கர்நாடகாவில் நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

தலித் குடும்பம்
நேற்று தும்கூரில் இருந்து சித்ரதுர்கா நோக்கி நடைபயணம் சென்ற ராகுல் காந்தி கோலாரை சேர்ந்த தலித் குடும்பத்தினரின் தோள் மேல் கை வைத்து அழைத்து சென்றார். ராகுலுடன் சென்ற தலித் பெண் ஷோபனாவின் மகன், கோயில் கம்பத்தை தொட்டதற்காக அவர்கள் ஊரை சேர்ந்த உயர்சாதி வெறியர்கள் அபராதம் விதித்து, குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்.

தலித் இடஒதுக்கீடு
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்களை தங்களோடு அழைத்துச் சென்று தார்மீக ஆதரவை வழங்கிய ராகுல் காந்தி தலித் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கர்நாடகாவில் மாநில பாஜக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின மக்களுக்கு 2 சதவீதமும் பழங்குடி மக்களுக்கு 4 சதவீதமும் வழங்கிய இரண்டு நாட்கள் கழித்து ராகுல் இவ்வாறு செய்துள்ளார்.

தலித் சாமியார்கள்
நேற்று ராகுல் காந்தி தலித் குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொண்ட அதே நாளில், "பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சாமியார்கள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசி, இடஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து வந்தனர். கர்நாடகாவில் அதிக வாக்கு விகிதத்தை கொண்ட பிரிவினராக பட்டியலின மக்கள் உள்ளனர்.

மல்லிகார்ஜுன கார்கே
எனவே அவர்களின் வாக்கு வங்கியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் விளைவாகவே கடைசி நேரத்தில் அரசு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவும் கர்நாடக மாநிலத்தின் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்தான். ஏறக்குறைய இவரது வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இதுவும் தேர்தலில் காங்கிரஸுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications