ஜாதி.. அடிமடியிலேயே கைவைத்த காங்கிரஸ்.. கர்நாடகா வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்.. விழிக்கும் பாஜக! ஆஹா
பெங்களூர்: கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு பாஜக முதல்வர் பதவி வழங்கியது. இதனால் காலம்காலமாக லிங்காயத் சமுதாய மக்களின் ஆதரவு பாஜகவுக்கு தான் உள்ளது. இந்நிலையில் தான் லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுக்களை பெறும் வகையில் யாரும் எதிர்பாராத வகையில் காங்கிரஸில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் ஷாக்கில் உள்ளனர்.
கர்நாடகாவில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அரசியல் கட்சிகளால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜனதாதளம்(எஸ்) கட்சி 92 தொகுதிளுக்கு முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி சார்பில் 90 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
இருப்பினும் பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இதற்கிடையே தான் இன்று காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 124 தொகுதிகளில் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியானது. முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் ராம்நகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

கார்கேவின் மகனுக்கு வாய்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் எம்எல்ஏவுமான பிரியங்க் கார்கே கலபுரகி மாவட்டம் சிதாபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்எல்ஏவுமான பரமேஸ்வர், துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில் போட்டியிடுகிறார்.

லிங்காயத் சமுதாயத்துக்கு அதிக வாய்ப்பு
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது முதற்கட்டமாக வெளியாகி உள்ள 124 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சி லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு வழங்கி உள்ளது. லிங்காயத் சமுதாயம் என்பது கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளது. இதற்கு காரணம் எடியூரப்பா தான். எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்.

என்ன காரணம்?
மேலும் காங்கிரஸில் ஒக்கலிகர், குருபா உள்பட பிற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முதல்வராகி உள்ள நிலையில் லிங்காயத் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. தற்போது எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் லிங்காயத் தனிஒதுக்கீடு விவகாரத்தால் பாஜகவினர் மீது லிங்காயத் சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் பக்கம் லிங்காயத் சமுதாய வாக்குகளை பெற முடியும் என அக்கட்சி நம்புகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த வியூகத்தை பார்த்து பாஜக விழிக்கிறது.

எத்தனை பேருக்கு வாய்ப்பு?
அதன்படி இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 30 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது எஸ்சி சமுதாய மக்களை விட அதிகமாகும். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியில் இன்று வெளியான லிஸ்ட்டில் 22 எஸ்சி சமுதாயத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த 19 பேருக்கும், எஸ்டி சமுதாயத்தை சேர்ந்த 10 பேருக்கும், இடிகா, குருபா சமுதாயத்தை சேர்ந்த தலா 6 பேருக்கும், ரெட்டி, பிராமணர்களுக்கு தலா 5 பேருக்கும், பண்ட் பிரிவினர் 3 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம்கள் 8 பேருக்கும், கிறிஸ்தர், முகவீரா, உப்பாரா, ராஜ்புத் ஆகிய பிரிவுகளை சேர்ந்த தலா ஒருவருக்கும், பிற சாதி, மதத்தை சேர்ந்த 3 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழருக்கும் வாய்ப்பு
இதுதவிர கர்நாடகாவில் பெங்களூரில் தமிழர்கள் அதிகம் உள்ளனர். இதனால் தமிழர்களின் ஓட்டுகளை பெறும் வகையில் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மல்லேஸ்வரம் தொகுதியில் தமிழரான அனுப் ஐயங்காருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பெலகாவி மாவட்டத்தில் அதிகமான மராத்திய மக்கள் உள்ளன நிலையில் மராத்தியர்கள் 2 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications