மல்யுத்த வீராங்கனைகள், அதானி விவகாரம்.. அழுத்தமான மவுனம் ஏன்? பிரதமர் மோடி மீது காங். சரமாரி தாக்கு
பெங்களூர்: மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றுகிற பிரதமர் மோடி, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்தோ அதானி குழும முறைகேடுகள் குறித்தோ வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என காங்கிரஸ் தலைவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர்களை மிக கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி தமது பிரசாரத்தின் போது, காங்கிரஸின் சகாப்தம் முடிந்து போய்விட்ட ஒன்று. காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசக் கூடும். ஆனால் அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் ஒருபோதும் நிறைவேற்றாது. மக்களுக்கு துரோகம் செய்யக் கூடிய கட்சி காங்கிரஸ். ஆனால் பாஜகவோ மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியது என்பதை கர்நாடகா வாக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என சாடினார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி தந்து வருகின்றனர். இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியின் 100-வது எபிசோடில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஆனால் அதானி, சீனா, பொருளாதார பிரச்சனைகள் விவகாரங்களில் கனத்த மவுனமாகிவிடுகிறார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராடுகிறார்களே.. பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்றார்.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். பிரியங்கா காந்தி தமது பிரசாரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். சமூக சுகாதார பணியாளர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்தி வழங்குவோம். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ3 லட்சம் வழங்குவோம். கர்நாடகாவில் 40% கமிஷன் பெறுகிற ஊழலாட்சியை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தம்மை 91 முறை அவதூறாக, இழிவுபடுத்திவிட்டது என பிர்தமர் மோடி கூறியிருக்கிறார். பிரதமர் மோடி செய்த அவதூறுகளை பட்டியலிட்டுக் கொண்டே போனால் பல புத்தகங்களாக எழுதப்பட வேண்டியது இருக்கும். இந்த நாட்டின் பிரதமர் ஒருவர் தம்மை இழிவுபடுத்துகிறார்களே என பொதுமக்கள் முன்னிலையில் கதறுவதை இந்த தேசம் இப்போதுதான் பார்க்கிறது என்றார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications