பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத உச்சம்... கர்நாடகாவில் ஒரே நாளில் 248 கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா காரணமாக நேற்று மட்டும் மொத்தம் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கர்நாடகாவில் பதிவான கேஸ்களில் நேற்றுதான் அதிகமான கேஸ்கள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20246 ஆக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. அங்கு குறைவான கொரோனா சோதனைகள் செய்யப்படும் நிலையிலும் கூட கேஸ்கள் அதிகமாக வர தொடங்கி உள்ளது.

Coronavirus: Karnataka got 248 infections in single day

கர்நாடகாவில் கொரோனா காரணமாக நேற்று மட்டும் மொத்தம் 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 248 பேரில் மொத்தம் 227 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். கர்நாடகாவிலும் தமிழகத்தில் தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா அதிகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த நபர்கள் மூலம்தான் அங்கு அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மொத்தமாக 2781 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1837 பேர் ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

அடுத்தடுத்த கைதிகளுக்கு பரவியது.. மொத்தம் 30 பேருக்கு கொரோனா.. புழல் சிறையில் பெரும் பரபரப்பு! அடுத்தடுத்த கைதிகளுக்கு பரவியது.. மொத்தம் 30 பேருக்கு கொரோனா.. புழல் சிறையில் பெரும் பரபரப்பு!

Recommended Video

    தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்

    இதுவரை கர்நாடகாவில் 894 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இன்று 60 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 48 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒருவர் அங்கு பலியாகி உள்ளார் .

    English summary
    Coronavirus: Karnataka got 248 infections in single day today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X