கொரோனா ஊழல்: 'அந்த நீதிபதி' தலைமையில் கமிஷன்.. பெயரை சித்தராமையா சொன்னதும் பாஜக தலைகள் தெறி ஓட்டம்!
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா கால முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்; நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளது முந்தைய பாஜக ஆட்சியாளர்களை அலறவைத்தது.
சும்மா பேரு கேட்டாவே அதிருதுல்ல.. என்ற வசனம் நிச்சயம் கர்நாடகா நீதிபதி குன்ஹாவுக்கு பொருந்தும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரித்தவர். எந்த பேரங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக விசாரணை நடத்தி சர்வ வல்லமை படைத்தவர்களாக தங்களை காட்டிக் கொண்ட ஜெயலலிதா, சசிகலா அண்ட் கோவினரை சிறையில் தள்ளியவர். என்னதான் ஜெயலலிதா மறைந்தாலும் சசிகலா 4 ஆண்டு காலம் பெங்களூரில் சிறைவாசம் அனுபவிக்க காரணமாக இருந்தவர் நீதிபதி குன்ஹா. தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தில் நீதிபதி குன்ஹா என்ற பெயர் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பின்னணியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கோவிட்19 கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும். இம்முறைகேடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
இது தொடர்பாக ஏற்கனவே கர்நாடகா மாநில அரசு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி இருக்கிறார். அத்துடன் முந்தைய பாஜக அரசில் 40% கமிஷன், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்றது தொடர்பாகவும் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, பாஜகவினருக்கு எதிராக விசாரணைகளை தீவிரமாக்கி வருவதால் அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனராம்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications