கர்நாடகா மீது வன்மம்.. பாஜக எம்பி கம்பீர் இப்படி பண்ணலாமா? கோலியை சீண்டி.. கடைசில மாட்டிக்கிட்டாரே!
பெங்களூர்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் விராட் கோலியிடம் சண்டை போட்டதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜக எம்பி கம்பீர் கர்நாடகாவை அவமதித்துவிட்டதாக கூறியும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நேற்று பெங்களூர் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் கோலி - கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த போட்டியில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் 18.4 ஓவரில் அவுட்டானார். அப்போது கோலிக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கடுமையான வாக்குவாதம் ஆனது. இது இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலை பெரிதாக்கியது.

இதையடுத்து மேட்ச் முடிந்து லக்னோ வீரர் கைலி மேயர்ஸ் சகஜமாக கோலியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வேண்டுமென்றே கம்பீர் வந்து அப்படியே கைலியை அழைத்து சென்றார். நீ எப்படி கோலி கூட பேசலாம் என்பது போல அழைத்து சென்றார்.
தான் பேசிக்கொண்டே இருக்கும் போதே கைலியை இப்படி கம்பீர் அழைத்து சென்றதை கோலி விரும்பவில்லை.
கம்பீர் இப்படி நடந்து கொண்டதை கோலி அங்கேயே விமர்சனம் செய்தார். இதை பார்த்து.. என்ன என்ன என்பது போல.. தடுப்பதற்கு ஆள் இருக்கும் தைரியத்தில் கம்பீரும் முரண்டு பிடித்துக்கொண்டு முன்னேறி சென்றார்.
கோலி பயமின்றி அவர் முகத்திற்கு நேராக சென்று அவர் செய்தது தவறு என்று கூறி அவரை கண்டித்து பேசினார்.
ஒரு எம்பியாக இருந்து கொண்டு அவர் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
கர்நாடகா அவமானம்:
முக்கியமாக கவுதம் கம்பீர் விராட் கோலியிடம் சண்டை போட்டதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் பாஜக எம்பி கம்பீர் கர்நாடகாவை அவமதித்துவிட்டதாக கூறியும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஏனென்றால் பெங்களூர் - லக்னோ மேட்சில்.. லக்னோ வென்ற போது பெங்களூர் ரசிகர்களை பார்த்து ஷூ என்று எம்பி கவுதம் கம்பீர் மிரட்டினார். அவர் லக்னோ அணியின் ஆலோசகராக இருக்கிறார். ஒரு எம்பி இப்படி கிரிக்கெட் ரசிகர்களை பார்த்து இப்படி சொன்னது பெரிய சர்ச்சையானது.
பெங்களூர் ரசிகர்களை மொத்தமாக அவமதிக்கும் விதமாக கம்பீர் இப்படி நடந்து கொண்டார். அவரின் செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

நெட்டிசன்கள் பலரும் இதை விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு கன்னட டீம் க்காக இத்தன வருஷமா உசுர குடுத்து விளையாடின ஒரு ப்ளேயர பாஜக MP அவமதிச்சிருக்கான்.. மே10 வாக்குப்பதிவு கன்னடக்காரங்க ரொம்ப ரோஷக்காரங்க... சும்மாவா விடுவாங்க, என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
கர்நாடகாவின் அடையாளமாக ஆர்சிபி உள்ளது. அதன் அடையாளம் கோலி. அவரை அசிங்கப்படுத்தியதோடு.. பெங்களூர் ரசிகர்களையும் பாஜக எம்பி கம்பீர் அசிங்கப்படுத்துவது தவறு என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் சமயத்தில் அங்கே கம்பீரின் செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications