பெங்களூரில் அசிங்கம்.. பெண்ணின் ஆடையை களைந்து முத்தமிட்ட டாக்டர்! சாட்டையை சுழட்டிய கர்நாடக ஹைகோர்ட்
பெங்களூர்: பெண் நோயாளி மீது டாக்டர் தொடுத்த வழக்கில், கர்நாடக நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. அது என்ன?
கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரில் அந்த பிரபல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. இந்த மருத்துவமனைக்கு நெஞ்சுவலி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார்.

நெஞ்சுவலி பாதிப்பு என்பதால், இளம்பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தரப்பட்டது.. பிறகு ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே போன்றவற்றையும் எடுக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார்.. அத்துடன் டெஸ்ட் ரிப்போர்ட்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பிவைக்குமாறு சொல்லி உள்ளார் அந்த டாக்டர்.
ஈசிஜி: இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஈசிஜி, எக்ஸ்ரே போன்றவை எடுக்கப்பட்டது.. டாக்டர் சொன்னதுபோலவே, அந்த ரிப்போர்ட்களையும் அவரது வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்தார். இதற்கு பிறகு, மார்ச் 21-ம் தேதி, மதியம் 2 மணிக்கு, ஜர்கனஹள்ளியில் உள்ள தன்னுடைய கிளினிக்கிற்கு வருமாறு டாக்டர் அந்த பெண்ணிடம் கூறினார்.. இளம்பெண்ணும், சரியாக 2 மணிக்கு சென்றிருக்கிறார்.. அப்போது டாக்டர் மட்டுமே கிளினிக்கில் இருந்துள்ளார்.
இளம்பெண்ணை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள படுக்கையில் படுக்க சொன்னார்.. இதய துடிப்பை சரிபார்த்துவிட்டு, உள்ளாடைகள் உட்பட அனைத்து ஆடைகளையும் கழட்ட சொல்லி உள்ளார்.. 5 நிமிடம் பரிசோதித்துவிட்டு, பெண்ணின் மார்பில் டாக்டர் முத்தமிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கிளினிக்கை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டார்..
வழக்கு பதிவு: நடந்த சம்பவம் குறித்து, தன்னுடைய வீட்டில் சொன்னதுடன், புத்தனேஹள்ளி போலீசிலும் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில், டாக்டர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது..
உடனே டாக்டர், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. அந்த மனுவில், இளம்பெண்ணின் இதய துடிப்பை அறிவதற்காக, ஸ்டெதஸ்கோப்பை மட்டும், பெண்ணின் மார்பில் வைத்தேன்.. ஆனால் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் தரப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
விசாரணை: இந்த மனு, கர்நாடகா கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது டாக்டர் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கறாராக நீதிபதி எம்.நாகபிரசன்னா கூறிவிட்டார்.
நீதிபதி தன்னுடைய உத்தரவில் சொன்னதாவது: "புகார்தாரரின் சட்டை மற்றும் உள்ளாடைகளை கழற்றுமாறு மருத்துவர் கூறியிருக்கிறார்.. அத்துடன் அவரது மார்பகத்திலும் முத்தமிட்டதாக கூறப்படுகிறது... மருத்துவரின் இந்த நடத்தை ஐபிசியின் 354ஏ(1)(i) பிரிவின் கீழ் குற்றமாகும்..
நம்பகத்தன்மை: நோயாளியின் உடலை பரிசோதிக்க மட்டுமே மருத்துவருக்கு உரிமை உண்டு தவிர, அதை வேறு எந்த உணர்ச்சிக்கும் பயன்படுத்த முடியாது... நோயாளிகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும்போது அவர்களின் உதவியை நாடுகிறார்கள் என்பதை டாக்டர்கள் தங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.. எனவே, அத்தகைய சூழ்நிலையை தவறாக பயன்படுத்தக்கூடாது.
ஒரு பெண் நோயாளியை ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, குறிப்பாக உடல் பரிசோதனையின்போது இன்னொரு பெண் உடனிருப்பதும் அவசியம். ஆனால் சம்பந்தப்பட்ட டாக்டர் இந்த வழிகாட்டுதல்களையெல்லாம் மீறிவிட்டார்.. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான உறவு நம்பகத்தன்மையுடன் இருக்கக்கூடியது.. மருத்துவர் ஒருவர் அந்த நம்பிக்கையைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டால், நம்பிக்கையின் உறவு வெகுவாக பாதிக்கப்படும்...
பரபரப்பு: இந்த வழக்கை பொறுத்தவரை, தேவையற்ற மற்றும் வெளிப்படையான பாலியல் தூண்டுதல் இருந்ததால் டாக்டர் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே டாக்டரின் கோரிக்கை மனு நிராகரிக்கப்படுகிறது" என்று நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்... இந்த தீர்ப்பு கர்நாடக மாநிலத்தில் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications