சிஎம் போஸ்ட்! சித்தராமையாவுக்கு வேண்டாம்! 6 மேஜர் பாயிண்டோடு டிகே சிவக்குமார் போர்க்கொடி- லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் எனவும், தனக்கு தான் முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும் எனவும் டிகே சிவக்குமார் மேலிடத்திடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அவர் முன்வைக்கும் 6 முக்கிய பாயிண்டுகள் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடைபெற்றது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வென்றுள்ளனர்.

DK shivakumar wants Karnataka CM Post and he will explain with high command 6 points against Siddaramaiah

தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார்? என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் மாஜி முதல்வர் சித்தராமையா, தற்போதைய காங்கிரஸ் மாநில தலைவர் சித்தராமையா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் முதல்வராக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தான் சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்துள்ளது. அதேபோல் டிகே சிவக்குமார் இன்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார். டிகே சிவக்குமார், சித்தராமையா என இருவரும் முதல்வர் பதவியை பெறுவதில் மும்முரமாக உள்ளதால் அடுத்தடுத்து கர்நாடகா அரசியலில் பரபரப்பான சூழல் உள்ளது.

DK shivakumar wants Karnataka CM Post and he will explain with high command 6 points against Siddaramaiah

இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகாவில் முதல்வர் பதவியை தனக்கு தான் வழங்க வேண்டும் எனவும், சித்தராமையாவை கைவிட வேண்டும் என மேலிடத்திடம் டிகே சிவக்குமார் கூற உள்ளார். இதற்காக 8 முக்கிய பாயிண்டுகளை அவர் மேலிடத்திடம் எடுத்து கூற இருக்கிறாராம். அந்த 8 பாயிண்டுகளின் விபரம் வருமாறு:

முதல் பாயிண்ட்: கர்நாடகாவில் அகிண்டா எனப்படும் சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தலித் சமுதாய மக்களின் ஓட்டு சித்தராமையா மூலம் தான் கிடைத்தது என்பதை ஏற்க முடியாது. ஏனென்றால் இந்த ஓட்டுகள் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் பக்கம் தான் உள்ளது.

2வது பாயிண்ட்: தலித் மக்களுக்கான கட்சியாக எப்போதும் காங்கிரஸ் உள்ளது. இது காலம் காலமாக தான் தொடர்கிறது. இதற்கு கர்நாடகாவும் விதிவிலக்கல்ல. இத்தகைய சூழலில் மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் சித்தராமையாவால் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்தனர் என்பதை ஏற்க முடியாது.

3வது பாயிண்ட்: மேலும் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த தேர்தலில் கடினமாக உழைத்தார். அவருக்கு ஹைதரபாத்-கர்நாடகா பகுதியில் அதிக செல்வாக்கு உள்ளது. தேசிய தலைவர் பதவி வழங்கப்பட்டதால் அவரது செல்வாக்கு மாநிலம் முழுவதும் உயர்ந்தது. இதனால் தலித் மக்களின் ஓட்டுகள் சித்தராமையாவால் தான் காங்கிரசுக்கு கிடைத்தது என்பது மல்லிகார்ஜூன் கார்கேவை அவமானப்படுத்துவது போன்றதாகும்.

DK shivakumar wants Karnataka CM Post and he will explain with high command 6 points against Siddaramaiah

4வது பாயிண்ட்: கர்நாடகாவை பொறுத்தமட்டில் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கொடுக்காவிட்டாலும் கூட அகிண்டா எனும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஒட்டுக்கள் நம்மை விட்டு விலகி செல்லாது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5வது பாயிண்ட்; மாறாக இந்த தேர்தலில் கர்நாடகாவில் ஒக்கலிகர், லிங்காயத் மக்களின் ஓட்டுகள் முக்கியம். நான் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவன். மேலும் லிங்காயத் தலைவர்களிடமும் நல்ல உறவு உள்ளது. இந்த தேர்தலில் இரு சமுதாயத்தின் ஓட்டுக்கள் வந்தததால் தான் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதனால் இந்த 2 சமுதாயத்தை எளிதில் புறக்கணித்து விடமுடியாது.

6வது பாயிண்ட்: லிங்காயத் மக்கள் பொதுவாக பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவராக அதனை நம் கட்சிக்கு கொண்டு வந்துள்ளேன். இதனால் அவர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இது காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதனால் முதல்வர் பதவியில் என்னை அமர்த்த வேண்டும் என தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+