தூக்கி அடிக்கப்படும் சித்தராமையா? டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி! கர்நாடக அமைச்சர் சொன்ன மேட்டர்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து 2.5 ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கு டிகே சிவக்குமார் முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகிறது. சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டிகே சிவக்குமாருக்கு அப்பதவி கொடுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடகாவில் இந்த மாதத்துடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து 2.5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் அங்கு முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக டி.கே சிவக்குமார் முதல்வராக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. இது குறித்த அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும் என்றும் குறிப்பிட்டனர்.

கர்நாடக அமைச்சர்
இருப்பினும், இப்போது அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை என்று கர்நாடக அமைச்சர் பி.இசட். ஜமீர் அகமது கான் தெரிவித்துள்ளார். டி.கே. சிவகுமாருக்கு முதல்வர் ஆகும் ஆசை இருப்பது உண்மைதான் என்று போதிலும் சித்தராமையா 2028ல் தனது முதல்வர் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகே சிவக்குமார் பதவியேற்பார் என்றும் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்..
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், "எந்தவிதமான புரட்சியும் நடக்காது. 2028 வரை சித்தராமையா தான் முதல்வராக நீடிப்பார்.. டிகே சிவகுமாரின் ஆதரவாளர்களுக்குத் தங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பு. டிகே சிவகுமாருக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், 2028 வரை சித்தராமையா தான் முதல்வர். அதன்பிறகு டிகே சிவகுமார் முதல்வராவார்.
அடுத்த முதல்வர் டிகே சிவக்குமார் தான்
டிகே சிவக்குமார் கட்சிக்குப் பல ஆண்டுகள் உழைத்துள்ளார். அவரும் சித்தராமையாவும் இருந்ததால்தான் இன்று காங்கிரஸ் கட்சிக்கு 140 இடங்களில் வென்றுள்ளன. அவருக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சித்தராமையாவுக்குப் பிறகு சிவகுமார் முதல்வர் ஆக வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். 2028 வரை சித்தராமையா தான் முதல்வர், அதன் பிறகு சிவகுமார் தான் முதல்வர்.
டிகே சிவகுமார் கர்நாடகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்.. தசரா பண்டிகையின் போது, சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராகத் தொடர்வார் என்று கூறியிருந்தார். சிவகுமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அண்மையில், முன்னாள் எம்.பி. டி.கே. சுரேஷ் (சிவகுமாரின் சகோதரர்) கூட 2028 வரை சித்தராமையா தான் முதல்வராக இருப்பார் என்று கூறியிருந்தார்" என்று சுட்டிக்காட்டினார்.
சித்தராமையா
சித்தராமையா- டிகே சிவக்குமார் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்தாண்டு இறுதியில் கர்நாடக முதல்வர் மாற்றப்படலாம் என்று கடந்த சில காலமாகவே தகவல்கள் பரவின. இருப்பினும், சித்தராமையா இந்தத் தகவல்களை மறுத்தே வந்தார். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டால் மட்டுமே முதல்வர் பதவியை விட்டு விலகுவேன் என்றும் இல்லையென்றால் தானே 2028 வரை முதல்வராக நீடிப்பேன் என்றும் சித்தராமையா தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம்?
கர்நாடக அமைச்சர் ஜமீர் கான் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள்.. சித்தராமையா 2028 வரை முதல்வராகத் தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார். அமைச்சரவை மாற்றம் நடக்குமா என்ற கேள்விக்கு, "அது நடக்க வாய்ப்பு இருக்கிறது.. ஆனால், அதையும் கட்சி மேலிடம் தான் தீர்மானிக்கும்" என்றார்.
கடந்த 2023 மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே முதல்வர் பதவிக்குக் கடுமையான போட்டி நிலவியது. அப்போது டெல்லி மேலிடம் டிகே சிவகுமாரை சமாதானப்படுத்தி, அவரை துணை முதல்வராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
டிகே சிவக்குமாருக்கு சக்சஸ்.. ராஜினாமா முடிவை திரும்ப பெற்றார் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி -
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications