"நான் பிளாக் மெயில் செய்ய மாட்டேன்.. சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்.." டிகே சிவக்குமார் பரபர
பெங்களூர்: காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அவர் டெல்லி செல்லவில்லை. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் இருக்கும் 220 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகக் கடந்த புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது, பாஜக முன்னிலையில் இருப்பது போலத் தெரிந்தது. ஆனால், அதன் பின்னர் காங்கிரஸ் ரேசில் முந்தியது.

தேர்தல்: கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்றுள்ளது. அங்கே பாஜக 66 இடங்களிலும், ஜேடிஎஸ் 19 இடங்களிலும் வென்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கே 25 ஆண்டுகளில் ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைப்பது மூன்றாவது முறையாகும்.
இதனிடையே அங்கே முதல்வர் யார் என்பதில் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
டிகே சிவக்குமார்: இந்தச் சூழலில் சித்தராமையா முதல்வர் தேர்வு குறித்து ஆலோசிக்க டெல்லி சென்றார். காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அவர் டெல்லி செல்லவில்லை. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவக்குமார் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "எனக்கு வயிற்று வலி இருப்பதால் நான் டெல்லி செல்லவில்லை.. காங்கிரசில் 135 எம்எல்ஏக்கள் உள்ளனர்: என்னிடம் யாரும் இல்லை.. கர்நாடக முதல்வர் யார் என்ற முடிவைக் கட்சி மேலிடம் எடுக்கும்.. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்" என்றார்.
பிளாக்மெயில்: அதேபோல ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் கிளர்ச்சி செய்ய மாட்டேன்.. பிளாக்மெயில் செய்ய மாட்டேன்.. நான் ஒன்றும் குழந்தை இல்லை. எனக்கு எனத் தனியாக விஷன் உள்ளது விசுவாசம் உள்ளது.

அதேநேரம் கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும்.. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தருவீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சோனியா காந்தி என்னிடம் கூறினார். நான் இங்கே அமர்ந்து கொண்டு எனது வழக்கமான வேலையைச் செய்கிறேன். அடிப்படை மரியாதை, கொஞ்சம் நன்றியுணர்வு இருக்க வேண்டும். வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
வெளியே சொல்ல விரும்பவில்லை: தைரியத்துடன் தனி ஆளாகப் போராடி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. எங்கள் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறிய போதும், நான் மனம் தளராமல், தைரியமாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா மற்றும் ராகுல் காந்தி எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே இந்த விஷயத்தை அவர்களிடமே விட்டு விடுவோம்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications