புளிய மரத்துக்கடியில் அந்த ஜோடி.. அதென்ன 2 பேரும் ஒரே கலர்ல டிரஸ்..அதுல ஏதோ எழுதியிருக்கே? அடகடவுளே
பெங்களூரு: காதலனை விட்டு அந்த பெண்ணால் பிரிந்து வாழமுடியவில்லை.. ஆனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் திடீரென எடுத்த முடிவு, இப்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது. என்ன நடந்தது?
கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டம், கஜேந்திரகடா தாலுகாவில் உள்ளது நரேகால் என்ற கிராமம்.. இங்கு பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர்.. இன்று காலை, வழக்கம்போல் வேலை பார்ப்பதற்காக, வயல்வெளிக்கு கிராம மக்கள் வந்தார்கள்.

வயல்வெளி: அப்போது, வயல்வெளிக்கு அருகிலிருந்த புளிய மரத்தில், ஒரு ஆணும், பெண்ணும், தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.. பிறகு நரேகல் போலீசாருக்கு தகவல் தந்தையடுத்து, போலீசாரும் விரைந்து வந்தனர்..
மரத்தில் தொங்கி கொண்டிருந்த 2 பேரின் சடலங்களையும் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அந்த நபர்கள் யாரென்று விசாரணையையும் துவங்கினார்கள்.. அப்போதுதான், அவர்கள் இருவருமே, கடக் மாவட்டம், நரேகல் நகரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
காதலன்: அந்த பெண்ணின் பெயர் லலிதா, 21 வயதாகிறது.. அந்த ஆணின் பெயர் அப்பண்ணா கோரக்கி.. 28 வயதாகிறதாம். இவர்கள் 2 பேருமே நீண்ட நாட்களாகவே காதலித்து வந்திருக்கிறார்கள்.. இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கும் தெரியவந்துள்ளது.. ஆனால் 2 குடும்பத்திலுமே காதலை ஏற்கவில்லையாம்.. அதிலும் லலிதா வீட்டில் கொந்தளித்துவிட்டார்கள்..
உடனடியாக கடந்த 4-ம் தேதி லலிதாவுக்கு கட்டாயப்படுத்தி திருமணத்தை செய்து வைத்துள்ளனர். அவசரத்துக்கு கிடைத்த மாப்பிள்ளையை வைத்து, குடும்பத்தினர் வற்புறுத்தலுக்காகவே, இந்த திருமணத்தை லலிதா செய்து கொண்டதாக சொல்கிறார்கள்.
ஆனாலும், தன்னுடைய காதலன் அப்பண்ணாவை லலிதாவால் மறக்க முடியவில்லை. அதேபோல, லலிதாவையும், அப்பண்ணாவால் மறக்க முடியவில்லை. அதனால் 2 பேருமே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
வயல்வெளி: அதன்படியே தூக்கில் தற்கொலை செய்து கொண்டு உயிரை விடலாம் என முடிவு செய்தனர். வயல்வெளி அருகிலுள்ள இடத்தையும் தேர்ந்தெடுத்தனர்.. 2 பேருமே ஒரே கலரில் சட்டை அணிந்து கொண்டார்கள்.. அந்த 2 சட்டைகளிலுமே I LOVE YOU என்று அச்சிடப்பட்டது. அந்த சட்டையை அணிந்துகொண்டே, இருவருமே ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்..
இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. கல்யாணமாகி வெறும் 9 நாட்களில், காதலனுடன் சேர்ந்து கல்யாணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் கடக் மாவட்டத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications