ஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்!
Recommended Video
பெங்களூரு: வேண்டாம்னு நண்பர்கள் சொல்லியும் கேட்காமல் முத்தம் கொடுக்க போனார்.. கடைசியில் ஆஸ்பத்திரியில் குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கிறார் இளைஞர்!
கன்னடத்தில் ஒரு படம்.. அதில் யானைக்கு ஹீரோ முத்தம் தருவார். இந்த காட்சி அங்கு ரொம்ப பிரபலம் போலும்.
அதனால் பெங்களூருவை சேர்ந்த ராஜு என்ற 24 வயது இளைஞருக்கு இந்த காட்சி அப்படியே மனசில் பதிந்துவிட்டது. அதனால் தானும் அதேபோல யானைக்கு முத்தம் தர ஆசைப்பட்டார்.

காட்டுப்பகுதி
இதற்காக நண்பர்களை அழைத்து கொண்டு காட்டுக்கு போய் யானையை பார்த்து முத்தம் தர முடிவு செய்தார். அதன்படி, கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அவர்களுடன் சென்றார். அப்போது அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்திருந்தார்கள். சிறிது தூரத்தில் அங்கே யானை கூட்டமும் வந்தது.

விபரீதம்
யானைகளை பார்த்ததும், முத்தம் தந்துவிட்டு வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி யானை கூட்டம் அருகில் செல்ல முயன்றார் ராஜூ. ஆனால் நண்பர்கள் அவரை தடுத்தனர். "வேண்டாம்.. ஏதாவது விபரீதமாகிவிட போகிறது" என்று உஷார் பண்ணினார்கள்.

கட்டிப்பிடித்து முத்தம்
ஆனால் ராஜு கேட்கவே இல்லை. மண்டை நிறைய போதையும் ஏறி இருந்தது. யானை கூட்டத்துக்குள் நுழைந்து விட்டார்.. யானையை கட்டிப்பிடித்து கொண்டு இச்.. இச்சென்று முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து யானைக்கு முத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

படுகாயம்
அந்த யானைகள் என்ன நினைத்ததோ தெரியவில்லை.. 6 யானைகள் சேர்ந்து ராஜூவை தூக்கி வீசி எறிந்தது. இதில் ஒரு கட்டத்தில், 6 யானைகளால் தூக்கி வீசி எறியப்பட்டார். இதில் ராஜூ மரத்தின் மீது மோதி கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தார். பிறகு உடனடியாக பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications