வெறிச்சோடிய பெங்களூர் மெட்ரோ! காலையிலேயே மறியலில் இறங்கிய கன்னட அமைப்பினர்! அலேக்காக அள்ளிய போலீஸ்
பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. காலை 7.30 மணி முதலே இந்த அமைப்பினர் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 26ம் தேதியன்று காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு 18 நாட்கள் தொடர்ச்சியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாது மழை இல்லாததால் இவ்வளவு நீரை திறக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
மறுபுறம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பல்வேறு கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதனால் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை கர்நாடக காவல்துறை பெங்களூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இருப்பினும் கன்னட அமைப்புகள் காலை 7.30 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஓசூர் அத்திபள்ளியில் இன்று காலை 7.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற கன்னட அமைப்பினர் சுமார் 50 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல இந்த அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்திற்கும் திட்டமிட்டுள்ளதால் சுமார் 80 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல பெங்களூர் நகரை பொறுத்த அளவில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் இயங்கினாலும் அதில் ஒன்றிரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். இது தவிர மாநிலம் முழுவதும் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications