ரோட்டோர கடைகளில் சாப்பிடாதீங்க.. கொரோனா தொற்றிக்கொள்ளும்.. பெங்களூர் மாநகர கமிஷனர் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவது கொரோனா பரவலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று, பெருநகர் பெங்களூர் மாநகராட்சி (பிபிஎம்பி) ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா டெல்டா வைரஸ் மோசமாக பரவுவதால், தெருவோர கடைகளில் சாப்பிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Eating street food not safe amid Covid-19 outbreak, says Bangalore commissioner

பெங்களூரில் தற்போது உணவகங்கள் செயல்பட்டு மீட்கப்பட்டுள்ளன என்றபோதிலும், பார்சல் சேவைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது. தெருவோர கடைகளில் சுத்தம் பேணப்படுவது கிடையாது. வாய்களில், மூக்குகளில் தொட்ட கைகளை உணவு பதார்த்தங்களை பரிமாற பயன்படுத்த வாய்ப்புள்ளது. கையுறை போட்டு உணவு தயாரிக்கும் ஹோட்டல்கள் பாதுகாப்பானவை என்ற அர்த்தத்தில் கமிஷனர் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஒரு வீட்டில் ஒருவருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்றுவதற்கான திட்டம் இருக்கிறது என்று கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார். விரைவிலேயே மால்களை திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் திடீரென பெங்களூர் நகரில் கொரோனா கேஸ் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இன்று கடந்த 24 மணிநேரத்தில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+