கர்நாடகா: "ஆர்எஸ்எஸ் வந்தாலும் முடியாது" எடியூரப்பாவிற்கு ஆவேசமாக பதில் கொடுத்த ஜெகதீஷ் ஷெட்டர்!
பெங்களூர்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி சார்பாக உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டர் ஜெயிப்பது கடினம் என்று எடியூரப்பா கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார்.
பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த பாஜக ஒரு பக்கம் வியூகம் வகுத்து வரும் நிலையில், கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், இன்று கர்நாடகாவிற்கு வந்த ராகுல் காந்தியை ஜெகதிஷ் ஷெட்டர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:-
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலமும் இருப்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. விசாரணை அமைப்புகள் மூலம் என்னை கண்காணிக்க சட்ட விரோதமாக எதையும் நான் செய்யவில்லை. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது. சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்கள்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு செய்யப்படும் இத்தகைய பணியால் எனது வெற்றிக்கு பாதிப்பு வராது. சமூக விலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்கள். வீட்டில் அமர்ந்து செய்யப்படும் இந்த பணியால் எனது வெற்றியின் மீது எந்த தாக்கமும் ஏற்படாது. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு உள்ளூர் மக்களின் மனநிலை, இங்குள்ள சூழ்நிலை என்னவென்று தெரியாது.

பாஜக என்னை மரியாதைக்குறைவாக நடத்தியது. அதனால்தான் நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். இந்தக் கட்சியின் முக்கிய தலைவராக ராகுல் காந்தி உள்ளார். எனவே அவரிடம் பல விஷயங்கள் குறித்து பேசினேன். பாரதிய ஜனதாவில் லிங்காயத் சமூக தலைவர்கள் ஓரங்கட்டப்படுவது உள்பட பல விஷயங்கள் குறித்து பேசினோம். நான் போட்டியிடும் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த ஒருவர் போட்டியாக மனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் கட்சியினர் பேசி வருகிறார்க்ள். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
முன்னதாக நேற்று பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஜெகதீஷ் ஷெட்டரை ஷீட்டர் (ஏமாற்றுக்காரர்) என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மாநிலங்கவை உறுப்பினர் பொறுப்பு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக அமித்ஷா கூறியும் ஏற்க மறுத்தார். அதற்கான பலனை ஷெட்டர் அனுபவிப்பார். ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்" என்று கூறியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications