ஆன்லைனில் ஆர்டர் செய்த லேப்டாப்! 13 நிமிஷத்தில் கைக்கு வந்த ஆச்சரியம்! மிரண்டு போன பெங்களூர் கஸ்டமர்
பெங்களூர்: கடைக்கு போய் தேடி தேடி பொருட்கள் வாங்கும் காலம் குறைந்து தற்போது வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் இதிலும் அட்வான்ஸாக பெங்களூரில் பிளிப்கார்டில் பெண் ஒருவர் ஆர்டர் செய்த லேப்டாப் ஆனது 13 நிமிஷத்தில் டெலிவரி ஆகியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் பதிவிட்ட பதிவானது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்ட இந்த காலத்தில் மின்னணு வர்த்தகம் அதிகரித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே போகாமல் நினைத்த பொருட்களை ஆன்லைனிலேயே வாங்கி கொள்ளும் அளவுக்கு வசதிகள் அதிகரித்துவிட்டது. உணவு முதல் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஒரு செல்போனும் வங்கி கணக்கில் பணமும் இருந்தால் போதும்.. இருந்த இடத்தில் இருந்தபடியே வாங்கி கொள்ள முடியும்.

ஆன்லைன் வர்த்தகத்தில் போட்டியை சமாளித்து வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகளையும், விரிவான டெலிவரி சேவைகளிலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான பிளிப்கார்ட், அண்மையில் விரைவான டெலிவரி வழங்கும் சேவையை அறிமுகம் செய்தது.
குறிப்பிட்ட சில பொருட்களை ஆர்டர் செய்த அன்றே டெலிவரி செய்வதாக பிளிப் கார்ட் கூறியிருந்தது. ஏற்கனவே பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் இந்த சேவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பெங்களூரை சேர்ந்த சன்னி குப்தா என்பவர் பிளிப்கார்ட்டில் லேப்டாப் ஒன்று ஆர்டர் செய்ததாகவும், அடுத்த 13 நிமிடத்தில் டெலிவரி மேன் வந்து லேப்டாப்பை கொடுத்துவிட்டு சென்றதாகவும் தனது எக்ஸ் தளத்தில் வியப்புடன் பதிவிட்டு இருக்கிறார்.
அவரது பதிவு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. சன்னி குப்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிளிப் கார்ட்டில் இப்போதுதான் ஒரு லேப்டாப் ஆர்டர் செய்தேன். 7 நிமிடங்களில் டெலிவரி என்று இருந்தது. ஆர்டர் செய்ததும், சிறிதளவு தாமதம் ஆனதாக காட்டியது. சற்று நேரத்தில் 12 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என அப்டேட் ஆனது. சரியாக 13 நிமிடங்களில் லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
சன்னி குப்தாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளதோடு, தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'இதுதான் புதிய இந்தியா... இதுபோன்ற சேவைகளை எல்லாம் மேற்கத்திய நாடுகளில்தான் நினைத்து பார்க்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், '7 நிமிடத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என யாரும் கேட்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் இ - காமர்ஸ் பெற்றுள்ள அசுர வளர்ச்சியும் போட்டி அதிகரித்துள்ளதையும் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். அதேவேளையில் மற்றொரு நெட்டிசன் கூறும் போது, 'என்னதான் ஆன்லைனில் வேகமாக வாங்கினாலும், ஷோரூமில் பார்த்து பார்த்து வாங்கும் சவுகர்யம் இருக்குமா?' என பதிவிட்டு இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications