எம்.எல்.சி. ஆனார் மாஜி பிரதமர் தேவகவுடாவின் பேரன்; ஒரே குடும்பத்தில் 8-வது அரசியல் வாரிசு!
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சூரஜ் ரேவண்ணா, கர்நாடகா சட்ட மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.சி.யாகி உள்ளார். தேவகவுடா குடும்பத்தில் இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ள 8வது நபர் சூரஜ் ரேவண்ணா.
கர்நாடகா சட்டமேலவையில் 25 இடங்களுக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 20 மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே இத்தேர்தலில் வாக்காளர்கள். சட்டமேலவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் சூரஜ் ரேவண்ணா போட்டியிட்டார். அப்போது வாரிசு அரசியல் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தாலேயே சூரஜ் ரேவண்ணா வேட்பாளராக நியமிக்கப்பட்டார் என்றார். இதனைத் தொடர்ந்தே சூரஜ் ரேவண்ணா, வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சூரஜ் ரேவண்ணாவின் தந்தை முன்னாள் அமைச்சரும் தேவகவுடாவின் மகன்களில் ஒருவருமான ரேவண்ணா. சட்டமேலவைத் தேர்தலில் 1,433 வாக்குகள் வித்தியாசத்தில் சூரஜ் ரேவண்ணா வெற்றி பெற்றார். தற்போதைய நிலையில் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த 8-வது நபர்தான் சூரஜ் ரேவண்ணா.
தேவகவுடா, அவரது மகன் முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, குமாரசாமி, ரேவண்ணா மனைவிகள், சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் என தேவகவுடா குடும்பத்தினரது அரசியல் வாரிசுகள் பட்டியல் நீளமானது. தற்போது இந்த பட்டியலில் சூரஜ் ரேவண்ணாவும் இணைந்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications