Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

16 வயது காதலியை நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த காதலன்..! சென்னை விடுதியில் பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை திருமங்கலத்தில் விடுதியில் அடைத்து வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற காதலன் நண்பர்களுடன் சேர்ந்து லாட்ஜில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை ஜே.ஜே.நகரை சேர்ந்த மகாலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 41வயது ஆகிறது. இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளை காணவில்லை என்று கடந்த 27ம் தேதி சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காதலன் யார்

காதலன் யார்

இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று நடந்தவற்றை கூறி புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சில தகவல்கள் வெளியாகின. அதன்படி, சென்னை வில்லிவாக்கம் பாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை (26), இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

இளைஞர் ஏழுமலை, மகாலட்சுமியின் 16வயது மகளிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். சிறுமிக்கு ஒருகட்டத்தில் திருமண ஆசை காட்டிய ஏழுமலை திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்தி சென்று இருக்கிறார். அங்கு எல்லை மீறி நடந்து கொண்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மாணவி பலாத்காரம்

மாணவி பலாத்காரம்

பின்னர் ஏழுமலை அவரது நண்பர்களான பாடி பகுதியைச் சேர்ந்த ராமு, பாலசந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோரின் சிறுமி உள்ள தகவலை கூறி விடுதிக்கு வரவழைத்துள்ளார். அவர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காதலன் ஏழுமலை, அவரது கூட்டாளிகள் ராமு, பாலசந்திரன், கிருஷ்ணராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,

77வயதில் சேட்டை

77வயதில் சேட்டை

இன்னொரு சம்பவம். சேலம் அருகே 11 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 77 வயதான 2 பெண்டாட்டிக்காரரை போக்சோவில் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் பள்ளிக்கு புத்தகம் வாங்குவதற்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச்சேர்ந்த 77 வயதான ராமசாமி (எ) மஞ்சினியார் என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்

சேலம் போலீஸ்

சேலம் போலீஸ்

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், ராமசாமி (எ) மஞ்சினியாரை கைது செய்தனர். 2 பெண்டாட்டிக்காரரான ராமசாமிக்கு, 2 மகளும், 2 மகனும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+