உக்ரைனுக்கு எதிரான போரில் “இந்தியர்களை” இறக்கிவிட்ட ரஷ்யாவின் வாக்னர் படை.. பதறும் கர்நாடகா!
பெங்களூர்: உக்ரைனுக்கு எதிரான போரில் தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களை ரஷ்யாவின் வாக்னர் படை களமிறக்கிவிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா 2 ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தத்தை தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். சர்வதேச நாடுகள் உக்ரைன் -ரஷ்யா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் பலன் தரவில்லை. தற்போதும் இருதரப்பு யுத்தத்தை நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் முக்கிய பங்கு வகித்தது வாக்னர் படை. இது ஒரு தனியார் ராணுவம். வாக்னர் என்பவர் தலைமையிலான இந்த படையினர்தான் உக்ரைன் மீதான ரஷ்யா போரில் முன்னணியில் நின்றனர். இப்படையினர் தலைவர் வாக்னர், விமான விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில் வாக்னர் படை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த பின்னணியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தில் வாக்னர் படையில் இந்தியர்கள் இணைந்து போரிட்டது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நாராயணபேட் சுஷியான், கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைன் போர்க்களத்தில் சிக்கி இருக்கின்றனர். தெலுங்கானாவின் சுஷியான் துபாயில் வேலை பார்த்து வந்தார். ரூ2 லட்சம் ஊதியம் கிடைக்கும் என்பதால் ரஷ்யாவின் வாக்னர் படையில் இணைந்தார். இதேபோலவே கர்நாடகா இளைஞர்களும் வாக்னர் படையில் இணைந்தனர். இவர்கள் தற்போது தங்களது குடும்பங்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநில சட்டசபையில் இது தொடர்பாக அமைச்சர் , ரஷ்யாவின் தனியார் படையான வாக்னர் ராணுவத்தில் கன்னடர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப இருக்கிறோம். ரஷ்யாவின் வாக்னர் படையில் வட இந்திய இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications