குழந்தைகளுக்கு தமிழ் படிக்க தெரியவில்லையே என்று ஏக்கமா? இலவச ஆன்லைன் வகுப்பு இருக்கே.. கவலை ஏன்?
பெங்களூர்: இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் அறக்கட்டளை-பெங்களூரு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒரு மாதகாலத்திற்கான இணையவழி தமிழ்க்கற்றல் வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழறிஞர் பொள்ளாச்சி நசனால் வடிவமைக்கப்பட்ட கற்றல்முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் 28 நாட்களில் அடிப்படை தமிழ் கற்றுத்தரப்படுகிறது. தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் பயிற்சியில் இணைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்க்கற்றல் வகுப்புகள், பிப்.1 முதல் 28-ஆம் தேதிவரையில் நடக்கவிருக்கிறது.
ஜூம்(குவியம்) வழியாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ் வகுப்பில் அறநெறியை கற்பிக்கும்கதைகள், நாபிறழ் பயிற்சிக்காக பாடல்களும் கற்றுத்தரப்படுகின்றன.
இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகின்றது. முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற வகையில் 100 பேருக்கு மட்டும் பயிற்சியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை https://forms.gle/QFTjgKdPjmrNUhWWA என்ற கூகிள்ஃபார்மில் ஜன.30-ஆம் தேதி நள்ளிரவு12 மணிக்குள் பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகும். கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9820281623 என்ற செல்லிடப்பேசி எண்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications