இரட்டை மேம்பாலம் டூ சுரங்கப்பாதை வரை.. கர்நாடகா பட்ஜெட்டில் பெங்களூருக்கு அடித்த ஜாக்பாட்.. லிஸ்ட்
பெங்களூர்: 2025-26ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெங்களூருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 40.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.8,916 கோடி மதிப்பீட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம், சுரங்க பாதை, மானிய திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா மாநிலத்துக்கான 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா இன்று பெங்களூர் விதான சவுதாவில் (கர்நாடகா சட்டசபை கட்டடம்) தாக்கல் செய்தார். இது சித்தராமையாவின் 16வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் கர்நாடகாவில் அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பட்டியலில் தொடர்ந்து சித்தராமையா முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்ஜெட்டில் கர்நாடகா மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு துறை வாரியாக நிதி என்பது
ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்றைய பட்ஜெட் என்பது மொத்தம் 4.09 லட்சம் கோடியை மதிப்புடையது. இந்த பட்ஜெட்டில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:
* பெங்களூர் நகருக்கான ஆண்டு மானியம் ரூ.3 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் நிதி பெங்களூருக்கு கிடைக்க உள்ளது.
* சீர்த்திருத்தம் மற்றுமு் சொத்து வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் பெங்களூர் மாநகராட்சி சார்பில் கூடுதலாக ரூ.4,556 கோடியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* பெங்களூர் மாநகராட்சியில் வடக்கு - தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு சுரங்க காரிடார் திட்டம் என்பது ரூ.40 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.19 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்டுள்ளது
* பெங்களூரில் 40.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.8,916 கோடி மதிப்பீட்டில் பெங்களூர் 3ம் கட்ட மெட்ரோ பாதைக்கு நிகராக இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படும்.
* போக்குவரத்து நிறைந்த சாலை மற்றுமு் முக்கிய இடங்கள் என்று மொத்தம் 460 கிலோமீட்டர் தொலைவுக்கு பெங்களூர் மாநகராட்சி சார்பில் சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ள ரூ.660 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெங்களூரில் மேம்பாலங்கள் மற்றும் Grade Separtors வசதி என்பது 120 கிலோமீட்டருக்கு ஏற்படுத்தப்பட உள்ளது
* ‛பிராண்ட் பெங்களூர்' என்ற திட்டத்தின் கீழ் 21 திட்டங்களுக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கப்படுகிறது.
* ‛பிராண்ட் பெங்களூர்' திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்துக்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.413 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது'' என்று கர்நாடகா முதல்வரும், நிதி அமைச்சருமான சித்தராமையா அறிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications