15 ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த ‛மார்ஸ் ரோவர்'.. பெங்களூரில் நேரில் பார்க்க நல்ல வாய்ப்பு!
பெங்களூர்: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி வியக்கவைக்கும் வகையில் 15 ஆண்டுகளாக சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகள் செய்த ‛‛மார்ஸ் ரோவர் ஆப்பர்சூனிட்டி'' வாகனம் பெங்களூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நேரில் பார்த்து ரசிக்கலாம்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் விண்வெளி துறையில் தொடர்ந்து சாதித்து வருகிறது. மேலும் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களை அதிகமாக ஈடுபடுத்துவதற்கு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் அமெரிக்கா-இந்தியா இணைந்து பெங்களூரில் நாசாவின் மார்ஸ் ரோவர் ஆப்பர்ச்சூனிட்டியின் மாதிரியை கண்காட்சிக்கு வைத்துள்ளது. இளைஞர்கள் விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப மியூசியத்தில் நடக்கும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்.

அதாவது கடந்த 2003ம் ஆண்டில் நாசா ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ‛மார்ஸ் ரோவர் ஆப்பர்ச்சூனிட்டி' (செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் வாகனம்) விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ரோவர் வாகனத்தை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த வாகனம் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வை தொடங்கியது.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான சான்றுகள் மற்றும் அந்த சமயத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக செவ்வாய் கிரகம் உள்ளதா? என்பது தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளை தனது பணியின் போது ‛மார்ஸ் ரோவர் ஆபர்ச்சூனிட்டி' செய்தது. இதன் ஆயுட்காலம் 90 நாட்கள் என இருந்த நிலையில் யாரும் எதிர்பாரத விதமாக 15 ஆண்டுகள் வரை இது ஆ்வு மேற்கொண்டது. அதன்பிறகு 2018 ல் செவ்வாய் கிரகத்தில் வீசிய புயல் காரணம் புழுதி படர்ந்து செயல் இழந்தது. தொடர்ச்சியாக அதனை செயல்பட வைக்க முயன்ற முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து 2019ல் மார்ஸ் ரோவர் ஆப்பர்ச்சூனிட்டி வாகனம் முழுமையாக தனது சேவையை முடித்து கொண்டது.
உண்மையில் செவ்வாய் கிரக ஆய்வில் இந்த ‛மார்ஸ் ரோவர் ஆப்பர்சூனிட்டி' புதிய சாதனையை படைத்தது. இந்நிலையில் தான் இந்த ‛மார்ஸ் ரோவர் ஆப்பச்சுனிட்டி' மாதிரி நாட்டின் பல்வேறு இடங்களில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. துபாயில் கடந்த 2020ம் ஆண்டில் நடந்த சர்வதேச கண்காட்சியில் இது இடம்பிடித்தது. அதன்பிறகு அமெரிக்கா கண்காட்சியிலும் இது வைக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தமட்டில் இதற்கு முன்பு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக மையத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி உள்ளது.
இதற்கான துவக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சர்வதேச வர்த்தகத்திற்கான அமெரிக்க துணை செயலர் மரிசா லாகோ, சென்னை அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜூடித் ரவின், பெங்களூரில் உள்ள யுஆர் ராவ் சேட்டிலைட் சென்டரின் இயக்குனர் டாக்டர் எம் சங்கரன், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் நிசார் திட்டத்தின் சிஸ்டம் மேலாளர் அனா மரியா குரேரோ உள்ளிட்டவர்கள் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
இதுபற்றி சர்வதேச வர்த்தகத்திற்கான அமெரிக்க துணை செயலர் மரிசா லாகோ கூறுகையில்,‛‛அமெரிக்காவும் இந்தியாவும் முக்கியமான துறைகளில் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் விண்வெளி துறையும் இருநாடுகளின் நெருக்கத்தை பறைசாற்றுகிறது. இந்த கண்காட்சி என்பது விண்வெளி துறையில் இருநாடுகள் இடையேயான உறவை எடுத்துரைக்கும் நிகழ்வாக இருக்கும்'' என்றார்.
அமெரிக்க தூதர் ஜூடித் ரவின் கூறுகையில், "அமெரிக்கா சார்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்ளிட்டவை சார்ந்த கல்வியை மேம்படுத்தும் வகையில் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் கண்காட்சியை நடத்துவதில் பெருமை கொள்கிறோம். அடுத்த தலைமுறையினர் விண்வெளி ஆய்வில் அதிகம் ஈடுபட இந்த மார்ஸ் ரோவர் ஆப்பர்சூனிட்டியின் மாதிரி நிச்சயம் கைக்கொடுக்கும் என நம்புகிறோம். மேலும் இது இந்தியா-அமெரிக்கா இடையோன நீண்டகால விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை காட்டுகிறது.. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவுக்கு இந்தியா முக்கிய நாடாக இருக்கிறது.
2005ல் அமெரிக்கா-இந்தியா சிவில் விண்வெளி கூட்டு பணிக்குழு தொடங்கப்பட்டது. இந்த பணிக்குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பூமி சார், விண்வெளி, மனித விண்வெளி திட்டம், விவசாயத்துக்கான விண்வெளி திட்டம், வானிலை முன்னறிவிப்பு முதல் நடு எதிர்கொள்ளும் பிரச்சனை சார்ந்த விஷயங்களில் இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் உண்மையிலேயே இந்தியா-அமெரிக்கா விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் இணைந்து உலகை மாற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது'' என்றார்.
இந்த விழாவில் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் இயக்குனர் கேஏ சாதனா கூறுகையில், ‛‛ விஸ்வேஸ்வரய்யாவிண்வெளி தொழில்நுட்ப கேலரியில் நாசாவின் மார்ஸ் ரோவர் ஆப்பர்ச்சனிட்டியின் மாதிரி கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக இளம்வயதினரை கவரும். மேலும் விண்வெளியில் உள்ள அதிசயங்களைக் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications