Gas Crisis: பெங்களூர் ஹோட்டலில் Mint Lemoade ஜூஸுக்கு கேஸ் கட்டணம் வசூலா? ஓனரின் வினோத விளக்கம்
பெங்களூர்: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக பெங்களூரில் ஒரு ஹோட்டலில் எலுமிச்சை,புதினா ஜூஸுக்கு Gas Crisis என கூறி 17 ரூபாய் பில் சேர்க்கப்பட்ட விவகாரம் வைரலாகி வரும் நிலையில் இதை அந்த ஹோட்டல் உரிமையாளர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் மாயவரத்தான் என்றவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: பெங்களூருவில் ஒரு உணவகத்தில் Gas Crisis Charge என்று 17.01 ரூபாய் சேர்த்திருப்பதாக ஒரு ரசீது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து கூகுள் மேப்ஸில் அந்த உணவகத்திற்கு 1 ஸ்டார் பரிந்துரையை மக்கள் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதையும் சேர்த்து இரண்டு புதினா எலுமிச்சைப் பழச்சாறுக்கு 374 ரூபாய் பில். அதெல்லாம் சரி.. எலுமிச்சை ஜூஸூக்கு கேஸ் எதுக்கு?!
உணவக ரசீது சமூக வலைத்தளப் பகிரலில் இருந்து எடுக்கப்பட்டது. இது உண்மையான ரசீதா என்று அந்த உணவகத்திடம் கேட்க அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்ட போது இணைப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டு அதற்கான பில்லையும் இணைத்துள்ளார்.
ஈரான் போரால் தமிழகம் உள்பட இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கேஸ் சிலிண்டர் புக் செய்தும் கிடைக்கவில்லை என கூறி பலர் கேஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாக்குவாதம் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அண்மையில் சென்னையில் ஒரு ஹோட்டலில் ஒரு இட்லி, ஒரு வடை சாப்பிட்டத்தற்கு கேஸ் பயன்பாட்டு கட்டணமாக ரூ 19 வசூலித்ததாக சொல்லப்பட்டது. இது குறித்த ஹோட்டல் பில் வைரலான நிலையில் அந்த ஹோட்டலுக்கு ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது "இது வதந்தி! யாரோ எடிட் செய்து எங்கள் ஹோட்டல் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள். பில்லை பார்த்தாலே ஏதோ எடிட் செய்தது தெரிகிறது" என அந்த ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
அதே போல் பெங்களூரில் உள்ள அந்த ஹோட்டலின் போன் நம்பரை கூகுள் எடுத்து கேட்ட போது அதன் உரிமையாளர் அவினாஷ் என்பவர் பேசியிருந்தார். அவர் கூறியிருப்பதாவது: எலுமிச்சை பழச்சாறுக்கான பில் வைரலானது குறித்துதானே கேட்கிறீர்கள்.
அந்த பில்லில் பாருங்க, Gas Crisis என 17 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக இருந்தாலும் நாங்கள் 5 சதவீதம் டிஸ்கவுன்ட் என்ற பெயரில் அதே 17 ரூபாயை குறைத்துவிட்டோம். அதற்காக ஜூஸுக்கு மட்டும் டிஸ்கவுன்ட் கொடுத்துவிட்டோம் என நினைக்க வேண்டாம்.
சமைக்கக் கூடிய உணவுகள் எதற்குமே கேஸ் சிலிண்டருக்கு என நாங்கள் எந்த தொகையையும் வசூலிக்கவில்லை. இது கணினி கோளாறு. கடந்த ஒரு வாரமாக இப்படி கேஸுக்கென தனியாக பில் ஆட் ஆகிவிடுகிறது. ஆனால் நாங்கள் அதே தொகைக்கு வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி என குறிப்பிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறோம்.
இந்த கணினி பிரச்சினை இன்று முதல் சரியாகிவிட்டது. பில்லில் Gas Crisis என வரவில்லை என இந்த உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். சிஸ்டத்தில் நீங்கள் சேர்க்காமல் எப்படி Gas Crisis என சேரும் என கேட்டதற்கு அவர் "நாங்கள் சேர்க்கவில்லை, அது ஆட்டோமேட்டிக்காக சேர்ந்துவிட்டது. எது எப்படியோ சிஸ்டம் போட்ட பில்லை நாங்கள் வாடிக்கையாளருக்கு திருப்பி கொடுத்துவிட்டோம் என்றார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications