இன்னொரு இட்லி கொடுங்க.. 7வது மாடியில் இருந்து குதிக்கும் முன் கொரோனா நோயாளி பேசிய கடைசி வார்த்தை
பெங்களூரு: " எனக்கு ரொம்ப பசியாக இருக்கு, எனக்கு இன்னொரு இட்லி கொடுங்க" இதுதான் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி, 7வது மாடியில் இருந்து குதிக்கும் முன்பு பேசிய கடைசி வார்த்தை ஆகும்.
தெற்கு பெங்களூருவில் உள்ள திலக்நகரைச் சேர்ந்த ஆட்டோரிக்ஸா ஓட்டுனருக்கு (50 வயது) ஏப்ரல் 24ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நாளில் அவருடைய மனைவிக்கும் (45வயது) கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே அவருடைய மனைவி (45 வயது) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதன்பிறகு ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினர் யாருமே அருடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டாராம்.

தற்கொலை
இந்நிலையில் பெங்களுரு விக்டோரியா மருத்துவமனையின் துருமா கேர் சென்டரில் 7வது மாடியில் ஆட்டோ டிரைவர் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் திங்கள்கிழமை அன்று "எனக்கு ரொம்ப பசியாக இருக்கு இன்னொரு இட்லி கொடுங்க" என்று கேட்டிருக்கிறார். இதன்பிறகு அவர் திடீரென படுக்கையில் இருந்து எழுந்து சென்று 7வது மாடியில் இருந்து தீயணைப்புக்காக வைக்கப்பட்ட அவசர கால வழி வழியாக கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

டிரைவர் வேதனை
இதற்கிடையே "நிமோனியா தவிர, அந்த ஓட்டுனருககு நாள்பட்ட சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹெபடைடிஸ் சி தொற்று இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஏப்ரல் 25 அன்று அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு பல வியாதிகள் இருந்தன. இதனால் விரைவில் இறந்துவிடுவார் என உயிரிழந்த ஆட்டோ டிரைவர் தன்னிடம் அடிக்கடி கூறியதாக ஐ.சி.யுவில் அவருடன் இருந்த மற்றொரு நோயாளி தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்கள்
மூத்த சுகாதார அதிகாரிகள் உயிரிழந்த நோயாளி பற்றி கூறுகையில், அந்த நோயாளி அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கவில்லை, இது அவரை மேலும் வருத்தப்படுத்தியது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அழைத்திருந்தால் கூட அவர் இறந்திருக்கமாட்டார் . அவர் ஒவ்வொரு நாளும் எங்களிடம் கேட்பார். எங்களிடம் எந்த பதிலும் இருக்காது என்றார்கள்.

கல்யாணம் செய்திருக்கக்கூடாது
நான் கல்யாணமே செய்திருக்கக்கூடாது. இப்போது திலக்நகர் மக்கள் அனைவரும் என்னை சபித்திருப்பார்கள். நான் என்ன செய்வது? நான் இனி வாழ விரும்பவில்லை, "என்று அவர் ஒரு சுகாதார அதிகாரியிடம் முந்தைய நாள் இரவு படுக்கையில் கூறியிருக்கிறார். அத்துடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ்' காட்சிகளை அவர் அடிக்கடி மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications