பெங்களூர் முதலிடம்.. திருமணத்துக்கு பிறகு புதிய உறவை தேடும் 40 சதவீத பெண்கள்.. வெளியான தகவல்
பெங்களூர்: திருமணத்துக்கு பின்பு புதியதொரு உறவை தேடுபவர்களுக்கென 'கிளீடன்' என்றதொரு செல்போன் செயலி தற்போது அதிக அளவில் வேகமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு 40 சதவீத பெண்கள் புது உறவை தேடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பெங்களூர் மாநகரம் முதலிடம் பிடித்திருப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்ற நாடுகளை விடவும் வித்தியாசமானது, மற்ற நாடுகளில் எல்லாம் ஒரு மொழி அல்லது இரு மொழி இருக்கும்.. ஒரே மதம் பிரதானமாக இருக்கும். மதசார்ப்புள்ள நாடாகவும் இருக்கும். இனம் என்று பார்த்தாலும் ஒரே இனமாகவே இருக்கும். அல்லது ஒரு சில இனங்களுடன் இருக்கும். ஆனால் இந்தியா அப்படி இல்லை..

பல மொழிகளை கொண்ட நாடாக உள்ளது. பல மதங்கள், சாதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு மொழி, மதம், இனம், சாதி என மக்களுக்கு இடையே பல்வேறு பாரம்பரியம், கலாசாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல் திருமணத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பிரிவினரும் தங்களது பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்றும் வகையில் நடத்துவார்கள். என்னதான் பல கலாச்சாரங்கள் இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இந்தியாவில் பாரம்பரியமாக உள்ளது. அதேநேரம் காதல் திருமணங்களுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு உள்ளது. இதன் காரணமாக பலர் காதலித்தவரை திருமணம் செய்ய முடியாத நிலை உள்ளது. பெற்றோர்கள் ஏற்பது குறைவாக உள்ளது. திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பின்பும் சரி, ஆண் பெண்ணோடு பேசுவதில் பல சமூக கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் இன்றைக்கு இந்தியாவில் கணிசமான பெண்கள் அல்லது ஆண்கள் திருமணத்திற்கு பிந்தைய உறவை விரும்புகிறார்கள். மனைவியை பிடிக்கவில்லை என்கிற நிலையில் வேறு ஒரு பெண்ணை நாடுகிறார்கள். ஆனால் முறைப்படி மனைவிக்கு விவாகரத்து வழங்குவது இல்லை.. இதனால் கள்ளக்காதல் விவகாரமாக இவை எல்லாம் மாறுகின்றன. திருமணத்தின்போது ஆணும், பெண்ணும் தனக்கு ஏற்ற துணையா என்பதை அறியாமல் பெரியோர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு கணவனை பிடிக்காமல் வேறு ஒருவரை நாடுகிறார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இப்படி நாடுவது அதிகமாக உள்ளது.
பொதுவாக இந்திய கிராமங்களில் கள்ளக்காதல்களுக்கு, கணவன் அல்லது மனைவி கொடுமைக்கு ஆறுதல் கூறுவதாக வரும் நட்புகள் தான் ஆரம்ப புள்ளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் சந்தேகப்படும் கணவன்களை கொண்டவர்கள் வெறுத்து போய் வேறு ஆணை நாடுகிறார்கள். அதேபோல் ஆணும் சந்தேகப்படும் மனைவியின் காரணமாக அவர்களது சந்தேகத்தை உறுதி செய்யும் வண்ணம் வேறு பெண்ணை நாடுவதாக கூறப்படுகிறது. இதேபோல் கணவனை வெறுக்கும் மனைவிகள், மனைவியை வெறுக்கும் கணவன்கள், தனக்கான ஆறுதலான, தன் மேல் பிரியமான துணையை காணும்போது தங்களது குடும்ப சூழ்நிலை மறந்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இதுதான் பல குற்றங்களுக்கு காரணமாகவும் உள்ளது.
வெளிநாடுகளை பொறுத்தவரை இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை.. பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி சென்றுவிடுவார்கள். புதிய துணை எளிதாக தேடிக்கொள்வார்கள் என்கிற நிலை உள்ளது. அதற்காக ஆப்களும் தற்போது உள்ளன. அந்த வகையில்
கல்யாணத்திற்கு பின்பு புதியதொரு உறவை தேடுபவர்களுக்கென 'கிளீடன்' என்றதொரு செல்போன் செயலி தற்போது அதிக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான அந்த செல்போன் செயலி தற்போது இந்தியாவில் பிரபலமாகி அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்த ஆப்பில் இந்தியாவில் இருந்து 30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், 30 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் தான் அதிக அளவில் தங்களது பெயரை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மொத்த வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த செயலியில் பெங்களூருவைச் சேர்ந்த பெண்களே (20 சதவீதம்) அதிக அளவில் பெயர்களை பதிவு செய்திருப்பதாக கிளீடன் ஆப் நிறுவன தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக மும்பை (19 சதவீதம்), கொல்கத்தா (18 சதவீதம்), டெல்லி (15 சதவீதம்) உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹைதராபாத், கொச்சி, வதோதரா, குவஹாத்தி, போபால் உள்ளிட்ட நகரங்களிலும் அதிகமான பெண்கள் இந்த ஆப்பை விரும்புவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. சென்னையை இந்த லிஸ்டில் பெரிதாக சொல்லவே இல்லை என்பது ஆறுதலான விஷயம். இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று போற்றப்படும் பெங்களூர் குறித்து வெளியான இந்த தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications