Google Office: பெங்களூர் கூகுள் ஆபிஸ்க்கு பெற்றோரை அழைத்து சென்ற ஊழியர்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் கூட.. நெகிழ்ச்சி
பெங்களூர்: தங்கள் பிள்ளைகள் வேலை பார்க்கும் அலுவலகம் எப்படி இருக்கும்.. என்ன மாதிரியான வேலை செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத பெற்றோரே இருக்க முடியாது.. வாய்ப்பு இருந்தால் ஒருமுறை உன் அலுவலகத்திற்கு கூப்பிட்டுட்டு போயேன்... என்று பெற்றோர்கள் சில நேரம் தங்கள் மகன், மகளிடம் கேட்பது கூட நடக்கும்.
அப்படி கூப்பிட்டு போனால், அலுவலகத்தில் பெற்றோர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவார்கள். அப்படியான ஒரு விஷயம் தான் பெங்களூரில் கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண் ஊழியருக்கு நடந்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனம்
பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர் தீபிண்டி. இவர் தனது பெற்றோரை முதன்முறையாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேபாளத்தின் காத்மாண்டுவைச் சேர்ந்த கிளவுட் பொறியாளரான தீபிண்டி, தனது பெற்றோரை கூகுளின் ஆனந்தா அலுவலக வளாகத்திற்கு அழைத்துச் சென்றார்.
பெற்றோரை அழைத்து சென்று காண்பித்த வீடியோ
அப்போது அங்கு நடந்த தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார். இந்த காட்சிகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தக் காட்சிகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெற்றோரை, தான் வேலை செய்யும் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்து சென்று விளக்கி காட்டுகிறார் தீபண்டி.
தீபண்டியின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் அதை கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். கூகுள் அலுவலகத்தின் உள்ளேயே இருக்கும் விளையாட்டுப் பகுதிகளையும் உட்புற செயல்பாட்டு மையங்களையும் பார்த்த பெற்றோர்கள் பிரமித்த காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.
பெற்றோரின் ரியாக்ஷன்
கார், பைக் பந்தய விளையாட்டுகள் முதல் உள்ளரங்கு கோல்ஃப் மைதானம் வரை அனைத்து விளையாட்டுகளுக்குமான இடம் இருப்பதை பார்த்து.. அலுவலகத்தில் இவ்வளவு இருகிறதா? என வியப்புடன் பார்க்கும் காட்சிகள்தான் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கூகுள் அலுவலகத்திற்குள் இப்படியெல்லாம் இருக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை என்பது போல பெற்றோர்களின் ரியாக்ஷன் உள்ளது .
பெற்றோரின் வாழ்நாள் கனவு
இணையத்தில் வைரல் ஹிட் ஆகி வரும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவுகளை பொட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், "இதை பார்க்கும் பெற்றோருக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். ஒரு பெற்றோரின் வாழ்நாள் கனவு என்றே இதை சொல்லலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
கோடி ரூபாய் கொடுத்தாலும்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது சகோதரி.. பெற்றோரை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "தங்களின் பிள்ளைகளின் வெற்றியில் தான் பெற்றொரின் மகிழ்ச்சியே உள்ளது. இரவு பகல் பாராமல் உழைத்து தங்களின் எதிர்காலத்தை வடிவமைத்த பெற்றோருக்கு இதை விட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்காது. கோடி ரூபாய் கூட இவ்வளவு சந்தோஷத்தை கொடுக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
கூகுள் ஆனந்தா கிளை அலுவலகம்
கூகுள் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. பெங்களூரில் உள்ள இந்த ஆனந்தா கிளை அலுவலகம் கூகுளின் மிகப்பெரிய அலுவலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் சிலிகான் வாலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் அமைந்துள்ள இந்த அலுவலகத்திற்கு ஆனந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு சமஸ்கிருதத்தில் "முடிவில்லாத" அல்லது "எல்லையற்ற" என்ற பொருளைக் குறிக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்குவதை இது பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications