சித்தராமையா அரசின் இலவச திட்டங்களை.. பேஸ்புக்கில் விமர்சித்த அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் சித்தராமையாவை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்ட கர்நாடக அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டம் ஹோசதுர்காவை அடுத்துள்ளது கன்னுபெனஹல்லி பகுதி. இங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சந்தானமூர்த்தி. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது கர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் சித்தராமையாவை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார்.

குறிப்பாக சித்தராமையாவின் நிதிக்கொள்கை, இலவச திட்டங்களை அவர் தனது பேஸ்புக் பதிவில் விமர்சித்து எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சி காலத்தில் மாநில அரசின் கடன் ரூ.3,590 கோடியாக இருந்தது. தரம் சிங் ஆட்சி காலத்தில் மாநில அரசின் கடன் ரூ.15,635 கோடியாக இருந்தது.
குமராசாமி முதலமைச்சராக இருந்தபோது கர்நாடகா மாநில அரசின் கடன் ரூ.3,545 கோடியாக இருந்தது. எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது மாநிலத்தின் கடன் ரூ.25,653 கோடியானது. சதானந்த கவுடாவின் ஆட்சி காலத்தில் இந்த கடன் தொகை ரூ.9,464 கோடியாக இருந்தது. ஜெகதீஷ் ஷட்டர் ஆட்சியின்போது மாநிலத்தின் கடன் ரூ.13,464 கோடியாக இருந்தது.
அதே நேரம் கடந்த முறை சித்தராமையாக கர்நாடகா மாநில முதலமைச்சராக ஆட்சியில் இருந்தபோது மாநில அரசு ரூ.2.42 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார். அதாவது இதுவரை கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர்களிலேயே சித்தராமையாதான் அதிக கடன் வாங்கியதாக குறிப்பிட்டு இருந்தார்.
"இருப்பினும் அவரால் எளிதில் இலவச திட்டங்களை அறிவிக்க முடிகிறது" என்று அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் முதலமைச்சரை விமர்சித்து வெளியிட்ட இந்த பதிவு கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இதுகுறித்து சித்திரதுர்கா மாவட்ட பொதுக்கல்வித் துறை இணை இயக்குநர் கே.ரவிசங்கர் ரெட்டி தெரிவிக்கையில், "அந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக, ஆசிரியர் சந்தானமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்திட, ஹோசதுர்கா கல்வி அதிகாரி ஜெயப்பாவிடம் உத்தரவிட்டு இருக்கிறேன். அந்த ஆசிரியர் கர்நாடகா அரசு அதிகாரிகள் சட்டம் - 1966 ஐ மீறி இருக்கிறார். இது தொடர்பாக அந்த ஆசிரியர் மீது மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்படும்." என்று தெரிவித்து உள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications