Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டோட்டல் சேஞ்ச்.. மூடப்படுகிறதா பாஜக "தெற்கு வாசல்"? காங். வெல்வது சிரமம் போல.. அப்ப தொங்கு சட்டசபை?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.. இதில், மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவாகியுள்ளது. இது குறைவான சதவீத அளவே என்பதால், அரசியல் கட்சிகளிடம் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    Karnataka Elections 2023 | Karnataka Exit Polls 2023 | Who Will Win Karnataka Elections? | Oneindia

    மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரசும் கங்கணம் கட்டி தேர்தலை சந்தித்துள்ளன. இதற்கு நடுவில் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளே நுழைந்து, தேசிய கட்சிகளுக்கு இணையாக களமிறங்கியதால், மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

    Great change and Do the people of Karnataka want a change of government and What is BJP going to do the next

    கர்நாடக தேர்தலை முன்னிட்டு, தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகின.. அத்தனை கணிப்புகளிலுமே, பாஜக அபார வெற்றி பெறும் என்றோ, மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்றோ அறுதியிட்டு சொல்லவில்லை.. இதுவே, பாஜகவுக்கான சறுக்கலாகவும், காங்கிரஸ் கட்சிக்கான பிரதான வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது..

    முக்கிய காரணிகள்: எனினும், கர்நாடக தேர்தலை பொறுத்தவரை, லிங்காயத் வாக்கு வங்கி, வொக்கலிகா வாக்கு வங்கி, ஆளும் கட்சிக்கு எதிரான அலை போன்ற விஷயங்கள்தான் முக்கிய காரணிகளாக அமைந்து வருகின்றன.. இதில் பிரதானமானவர்கள் லிங்காயத்துகள் ஆவார்கள்.. இவர்கள்தான் கிங் மேக்கர்களாகவும் அங்கு திகழ்ந்து வருகிறார்கள்.. சுமார் 18 சதவீதம் அவர்களது எண்ணிக்கை இங்குள்ளது.. அதுவும், கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் இவர்களது நேரடி தாக்கமும் விழுந்துள்ளது.

    பொம்மை + எடியூரப்பா: எனவே இந்த முறை பிரச்சாரங்களின்போது, பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இந்த 3 கட்சிகளின் முதல் குறியும் லிங்காயத்துகள் மீதுதான் விழுந்தன என்பதை மறுக்க முடியாது. பசவராஜ் பொம்மை + எடியூரப்பா இவர்கள் 2 பேரும் ஆளுக்கொரு பக்கம் தூண்களாகவும் இருக்கின்றனர்.. ஒருவேளை இந்த சமூகத்தின் ஆதரவு பாஜகவுக்கு அதிகம் கிடைத்தால், மீண்டும் காவி கொடி கர்நாடகத்தில் பறக்கும் என்றே தெரிகிறது. இதற்காகவே, முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு 51 தொகுதிகளில் லிங்காயத் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது காங்கிரஸ்.

    அடுத்ததாக, வொக்கலிகா சமூகத்தினர், ஒவ்வொரு தேர்தலின்போதும் முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.. இவர்கள் மட்டுமே மொத்தம் 16 சதவீதம் எண்ணிக்கையில் உள்ளனர்.. ஆனால், லிங்காயத்துகள் அளவுக்கு பாஜகவை இவர்கள் ஆதரிப்பதில்லை என்றே தெரிகிறது.. காங்கிரசுக்கோ ஓரளவு சப்போர்ட் உள்ளது. காரணம், இந்த இனத்தின் ஒரே ஒரு துடிப்பாக டிகே சிவகுமார் மற்றும் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளனர்..

    Great change and Do the people of Karnataka want a change of government and What is BJP going to do the next

    ஒருவேளை இந்த சமூகத்தின் வாக்கு சதவீதத்தை, ஒரு குறிப்பிட்ட அளவு பாஜக பெற்றுவிட்டாலும்கூட, காவி கொடி கர்நாடகத்தில் பறக்க காரணமாகிவிடக்கூடும்.. ஆக, இந்த 2 சமூகத்தினரை பிரதானமாக நம்பியே தேசிய கட்சிகள் தங்கள் முடிவுகளை எதிர்நோக்கி உள்ளன.

    வடமாநிலங்கள்: இதற்கு முன்பு எத்தனையோ வடமாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது.. ஆனால், அங்கெல்லாம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இத்தனை முறை பறந்து பறந்து பிரச்சாரம் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை.. அந்த அளவுக்கு பிரச்சாரங்கள் சூடு பிடித்தன... பல்வேறு திட்டங்களும், அறிவிப்புளும் பிரதமரால் வெளியிடப்பட்டன.. இலவச அறிவிப்புகளை விமர்சிக்கும் பாஜக, அதே விஷயத்தை இந்த முறை தங்கள் கையில் எடுத்தது..

    பஜ்ரங் தள்: இதில் கடைசி அஸ்திரமான, பஜ்ரங்பாலி மற்றும் பஜ்ரங்தள் விவகாரத்தை கையில் எடுத்தது பாஜக.. பிரதமர் நடத்திய ரோடு ஷோவில், ஜெய் பஜ்ரங்பலி என்ற விண்ணை முட்டியது.. இது காங்கிரஸ் தரப்பை சீண்டும்விதமாகவே பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட இந்த விஷயத்தை எந்த அளவுக்கு பாஜக சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது என்பது இனிமேல்தான் தெரியவரும்.
    அதேபோல, ஜேடிஎஸ்ஸின் பங்கு எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், அநேகமாக இந்த முறை தொங்கு சட்டசபை அமையலாம் என்கிறார்கள்.. அப்படி மட்டும் அமைந்துவிட்டால், இதையே தங்களுக்கு சாதகமாக்கவும் பாஜக நிச்சயம் முயலும் என்கிறார்கள்..

    முன்னோட்டம்: இந்த தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா? சாவா? போராட்டமாக அமைந்துள்ளது.. காரணம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதனைப் பார்ப்பதுதான்..இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் அகில இந்திய அளவில் தான் ஒரு பலவீனமாக கட்சியாக பார்க்கப்படக்கூடுமோ என்ற எண்ணம் அக்கட்சியிடம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பெரிய மாநிலங்களுக்கு அடுத்தடுத்த தேர்தல்கள் நடைபெற உள்ளநிலையில், இந்த கர்நாடக தேர்தல் அதற்கான முதல் புள்ளியாக பார்க்கப்பட்டு வருகிறது.

    பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் ஒரே எதிர்க்கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான்.. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் 3 மாநிலங்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானும் உள்ளன.. ஒருவேளை ஆட்சியை அங்கு இழக்க நேரிட்டால், 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸின் முக்கியத்துவம் குறைந்துவிடும்.. அந்தவகையில், மத்தியப்பிரதேச தேர்தல் போலவே கர்நாடக தேர்தலும் காங்கிரசுக்கு முக்கியமாக உள்ளது.. அதனாலேயே ராகுல் காந்தியும், பிரியங்காவும், மாறி மாறி வந்து பிரச்சாரம் செய்தனர்.

    ராகுல்காந்தி நடைபயணம்: இதில் ராகுல்காந்தின் நடைபயணமானது, முக்கிய இடத்தை பெற்று தந்துள்ளது.. தன்னெழுச்சியான போராட்டம் என்றே சொல்லலாம்.. கர்நாடகா உட்பட நாடு முழுவதும் இந்த யாத்திரையானது, பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டதை மறுக்க முடியாது.. போதாக்குறைக்கு எம்பி பதவி பறிப்பில் பாஜக கையை வைக்க, அதுவே, ரிவர்ஸ் கியர் போட்ட மாதிரி, ராகுலுக்கு ஆதரவு அலைகளை அபரிமிதமாக அள்ளிவழங்கிவிட்டது. இப்படியான கருத்துக்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இன்றைய தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.. ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன..

    Great change and Do the people of Karnataka want a change of government and What is BJP going to do the next

    வாக்குப்பதிவு: வழக்கமாக, பொதுத்தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம்.. வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால், எதிர்க்கட்சிகளுக்கு சாதகம் என்ற கருத்து, இந்திய அரசியல் வட்டாரங்களில் இருந்து வருகிறது.. ஆனால், நம்முடைய திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, இந்த கருத்தெல்லாம் அடிபட்டு போனது வேறு விஷயம்.. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை.. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைதான் அதிகரித்தது..

    எனினும், வாக்கு சதவீதம் அதிகமாக பதிவாகி இருந்தால், அது ஆளும் கட்சிக்கு எதிரானதாக கருதப்படுவது இயல்பான விஷயமாகும்.. காரணம், ஆளும்கட்சி மீதான கோபத்தை இது அம்பலப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.. இதுவே குறைவான வாக்குசதவீதம் என்றால், அது ஆளும் ஆட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.. அந்தவகையில், கர்நாடகாவில், அதிகமா இருந்தால், அது ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே பார்க்கப்படும்.

    அதிகமான பதிவுகள்: உதாரணத்துக்கு இதே கர்நாடக மாநிலத்தில், கடந்த 2008-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, 65 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.. பிறகு, 2013-ம் ஆண்டு தேர்தலில், 71.45 சதவீத வாக்குப்பதிவும், 2018-ல் 72.36 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன.. இந்த வாக்குபதிவு பட்டியலின்படி பார்த்தால், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்கு பதிவின் சதவீமானது, அதிகரித்தபடியே உள்ளது.. அதாவது, அந்தந்த நேரத்தில் ஆளக்கூடிய கட்சிகளுக்கு எதிரான மனநிலைமையைத்தான் இந்த வாக்கு பதிவுகள் நிரூபித்திருக்கின்றன..

    Great change and Do the people of Karnataka want a change of government and What is BJP going to do the next

    புதுமண தம்பதி: அந்தவகையில், தற்போதைய தேர்தல் இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.. காலையில் வாக்குப்பதிவு துவங்கியபோதே மந்தமாக காணப்பட்டது.. யாரும் எதிர்பாராத அளவு வாக்காளர்கள் குறைவாக வந்து வாக்களித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. குறிப்பாக, பெங்களூருவில் காலை முதலே வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.. ஓரிடத்தில் திருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க புதுமண தம்பதி ஓட்டுப்போட வந்தனர்.. ஹாசன் மற்றும் பெல்காம் மாவட்டங்களில் வாக்களிக்க வந்த 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகமும் நடந்தது..

    மாநிலம் முழுவதும் 37,777 இடங்களில் உள்ள 58545 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் கடைசி 2 மணி நேரம் மட்டும் விறுவிறுவென வாக்குகள் பதிவாகின.. இதில், அதிகப்பட்சமாக பெங்களூரு ஊரக மாவட்டத்தில் சிப்பல்லபுரியில் 76.64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் 48,63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.. 5 மணி நிலவரப்படி, 65.58 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன

    குறைவான வாக்கு பதிவு: மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.. மாலை 5 மணி நிலவரப்படி 65.69%, வாக்குகள் பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட குறைவான வாக்கு பதிவுதான்.. அப்படியானால், ஆளுங்கட்சிக்கு ஆதரவான சூழல் கர்நாடகாவில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் இந்த வாக்குப்பதிவு சதவீதம் எழுப்பி விட்டு போயுள்ளது.. ஆனால் அதேசமயம், தேர்தலுக்கு முந்தையை கருத்து கணிப்புகளிலும் சரி, தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட்போல்களிலும் சரி, பாஜகவுக்கு ஆதரவாகவோ, காங்கிரசுக்கு ஆதரவாகவோ வரவில்லை.. இரு தரப்புக்குமே மாறி மாறி ஆதரவு கிடைத்துள்ளதுடன், மெஜாரிட்டி யாருக்குமே வரவில்லை.

    சட்டசபையில் தனிப் பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.. அதன்படி பார்த்தால், அரசியல் நிபுணர்கள் சொல்லி வருவதைபோல, தொங்கு சட்டசபை வந்துவிடுமோ என்ற சந்தேகமும் வலுவாகி உள்ளது.. இன்னொன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.. 1985-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்கனவே ஆண்ட கட்சிக்கு மீண்டும் மக்கள் கர்நாடகத்தில் வாக்களித்தில்லை.. 38 ஆண்டுகள் ஆகிவிட்டன... இந்த மரபை யார் உடைத்தெறிய போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. எதுவானாலும், வரும் 13ம்தேதி முடிவு தெரிந்துவிடும்..!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+