ஆபாச வீடியோ வழக்கில் திடீர் திருப்பம்.. இன்று மாலை விசாரணைக்கு ஆஜராகிறார் ரேவண்ணா! அடுத்து என்ன
பெஙகளூர்: பாலியல் புகார் வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜேடிஎஸ் எம்பி பிரிஜ்வலின் தந்தை ரேவண்ணா மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக அவர் இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் பிரிஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வெளியாகிக் கடந்த சில வாரங்களாகவே அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பரபரப்பு: கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் சார்பில் பிரிஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். இந்த பிரிஜ்வல் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது கர்நாடகாவைத் தாண்டி ஒட்டுமொத்தமாக தேசியளவில் பாஜகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
பிரிஜ்வல் மீதான விசாரணை ஓயும் முன்பே அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் விசாரணைக்கு ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஏற்கனவே, பிரிஜ்வல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவர் ஜெர்மனியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாலியல் தொல்லை..கடத்தல்! எகிறும் கிரைம் ரேட்..சிக்கலில் எச்டி.ரேவண்ணா! இன்று முன் ஜாமீன் மனு விசாரணை
முன்ஜாமீன்: இதற்கிடையே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியதாக எச்.டி.ரேவண்ணா மீது மற்றொரு வழக்கு செய்யப்பட்டது. ரேவண்ணா மற்றும் அவரது மனைவி ன பவானியின் ஆதரவாளர்களால் அந்த பெண் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கடத்தப்பட்ட பெண்ணின் மகள் கேஆர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஜாமீன் கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ரேவண்ணா முதலில் மனுத்தாக்கல் செய்தார். இருப்பினும், அந்த வழக்கில் ஜாமீன் பெரும் வகையில் பிரிவுகளில் ரேவண்ணா மீது வழக்குகள் பதியப்படவில்லை என போலீசார் கூறினர். இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்ற ரேவண்ணா, கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை: இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் வாதங்களை முன்வைக்கக் கூடுதல் அவகாசம் தேவை என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். அரசு தரப்பில் ஜாமீன் வழங்கவும் சரி, கால அவகாசம் வழங்கவும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கால அவகாசம் கேட்ட கோரிக்கையை ஏற்றுப் பிற்பகல் 3 மணியளவில் நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.
ஆஜராகிறார்: இதற்கிடையே முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இன்று மாலை ரேவண்ணா ஆஜராக இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.. ஆபாச வீடியோ வழக்கில் இன்று மாலை 5.30 மணிக்குச் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராக பிரஜ்வாலின் தந்தை ரேவண்ணா சம்மதம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தைக்கு எதிராக 2ஆவது லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இடையில் ரேவண்ணா வீட்டிலும் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி இருந்தனர். ஹாசன் ஹோலேநரசிபுராவில் ரேவண்ணா வீட்டுக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வந்தும் எஸ்ஐடி விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!












Click it and Unblock the Notifications