கர்நாடகாவில் டாப்பில் வரும் காங்கிரஸ்.. பின்னாலேயே கிட்ட வரும் பாஜக! அப்போ ஜேடிஎஸ் எங்கே! புது சர்வே
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது குறித்து ஜன் கி பாத் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன் இந்தாண்டு 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
இதனிடையே கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன.

கர்நாடக தேர்தல்: அங்கே இப்போது பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அங்கே இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கும் நிலையில், எப்படியாவது கர்நாடக மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே பாஜக முயல்கிறது. இதற்காக வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது.
தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். இதனால் அங்கு ஆட்சியைத் தக்க வைக்கவே பாஜக கடுமையாக முயல்கிறது. அதேநேரம் அங்கே பசவராஜ் பொம்மை மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த பயன்படுத்தி எப்படியாவது வெல்லக் காங்கிரஸும் முயன்று வருகிறது. இடையில் ஜேடிஎஸ் கட்சியும் குறிப்பிட்ட தொகுதிகளைக் குறிவைத்து களம் காண்கிறது.
யார் முன்னிலை: இதனிடையே தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ஜன் கி பாத் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதேநேரம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடகாவில் காங்கிரஸ் 94 இடங்களில் வெல்லும் என்று ஜன் கி பாத் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய இடைவெளி இல்லை. அடுத்து பாஜக 93 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிராந்திய கட்சியான ஜேடிஎஸ் 25-29 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் அல்லது சுயேச்சைகள் ஒரு இடத்தில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக vs காங்கிரஸ்: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது கிட்டூர் கர்நாடகா பகுதியில் மொத்த 50 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜக 31 இடங்களிலும், காங்கிரஸ்: 19 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. ஜேடிஎஸ் கட்சிக்கு அங்கே வாய்ப்பில்லை. பெங்களூர் பகுதியில் மொத்த 32 இடங்கள் உள்ள நிலையில், இங்கே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக 15 இடங்களிலும் காங்கிரஸ்: 14 இடங்களிலும் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல ஜேடிஎஸ் இங்கே 3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல 26 இடங்களைக் கொண்ட மத்திய கர்நாடகா பகுதியில் பாஜக 13 இடங்களிலும் காங்கிரஸ் 12 இடங்களிலும் ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது. பழைய மைசூரில் 57 இடங்கள் இருக்கும் நிலையில், பாஜக 12 இடங்களிலும் காங்கிரஸ் 23 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது. இங்கே ஜேடிஎஸ் 22 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக வலுவாக உள்ள கோஸ்டல் கர்நாடகா பகுதியில் 19 இடங்கள் உள்ள நிலையில், அங்கே பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கல்யாண கர்நாடகா பிராந்தியத்தில் மொத்த 40 இடங்கள் உள்ள நிலையில், அங்கே பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தொங்கு சட்டசபை: முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 104 இடங்களில் வென்றிருந்தது. அதேபோல கடந்த தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களிலும் ஜேடிஎஸ் 37 இடங்களிலும் வென்றிருந்தது. இந்தத் தேர்தலில் சீட்களில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், ஒட்டுமொத்தமாக அதேபோல தொங்கு சட்டசபையே அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் அதேபோல ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவாகும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications