பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பாஹுபலி' ராக்கெட்டில் பயணம்.. 6 சக்கர ரோவர் ரோபோ.. சந்திராயன்-2 செம ஸ்பெஷல்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்

    பெங்களூர்: நிலவை ஆய்வு செய்யும், விண்கலமான சந்திராயன்-2 நாளை விண்ணில் ஏவப்படுகிறது. சந்திராயன்-2 தொடர்பாக சில சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.

    Here is the details about Chandrayaan-2

    Here is the details about Chandrayaan-2

    * ஜி.எஸ்.எல்.வி எம்.கே.- III அல்லது "பாஹுபலி" என்ற செல்ல பெயர் கொண்ட, இஸ்ரோவின் மிக சக்திவாய்ந்த லாஞ்சர் ராக்கெட், சந்திராயன் -2ஐ அதன் சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும்.

    * ராக்கெட் ஏவப்பட்ட 973.7 வினாடிகளில் சந்திராயன் -2 பிரியும்

    * ஏவப்பட்ட 54 நாட்களுக்குப் பிறகு சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும். லேண்டர்-விண்கலம் பிரிப்பு 50வது நாளில் நடைபெறும்.

    * இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயின் பெயரால் சந்திரயான் 2 லேண்டருக்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு சந்திர நாளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். ஒரு சந்திர நாள் சுமார் 14 பூமி நாட்களுக்கு சமம்.

    * கர்நாடக மாநிலம் ஹாசன் அருகிலுள்ள பையலாலு பகுதியிலுள்ள உள்ள ஐ.டி.எஸ்.என் உடன் தொடர்பு கொள்ளும் திறனையும், ஆர்பிட்டர் மற்றும் பிரக்யன் ரோவருடன் தொடர்பு கொள்வது விக்ரம் லேண்டரின் பணி.

    * சந்திரயான் 2 இன் ரோவர் என்பது பிரக்யான் என்று அழைக்கப்படுகிறது. 6 சக்கரம் கொண்ட ரோபோ வாகனம் இது ஆகும். சமஸ்கிருதத்தில் 'ஞானம்' என்று இதற்கு அர்த்தம். இது வினாடிக்கு 1 சென்டிமீட்டர் வேகத்தில் 500 மீ (0.5 கி.மீ) வரை பயணிக்கும். அதன் செயல்பாட்டிற்கு தேவையான சக்தியை சூரிய ஒளியில் பெறுகிறது.

    * இதுவரை எந்த நாடும் ஆராயாத, நிலவின் தென் துருவப் பகுதிக்கு இந்தியாவின் சந்திராயன்-2 பயணப்படுகிறது.

    * சந்திராயன்-2 ஐ ஏவுவதற்கான, 20 மணி நேர கவுண்டன் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. இன்று காலை 6.51 மணிக்கு கவுண்டன் தொடங்கியது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

    English summary
    Chandrayaan 2 is an Indian lunar mission that will boldly go where no country has ever gone before -- the Moon's south polar region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X