பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹாய் கய்ஸ் இதை ட்ரை பண்ணுங்க... ஆடை அலங்காரத்தில் பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்று திரும்பிய நிலையில் ‛ஹாய் ஹயிஸ் இதை ட்ரை பண்ணுங்க' என நேபாள உடை அணிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடை அலங்காரத்தை பிரகாஷ்ராஜ் கலாய்த்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 2019 மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 28 ஆயிரத்து 906 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய

முன்னதாக 2017 ல் அவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அன்று முதல் பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கும், பாஜகவினருக்கும் எதிராக கருத்துகள் கூறி வருகிறார்.

 பிரகாஷ் ராஜ் தொடர் விமர்சனம்

பிரகாஷ் ராஜ் தொடர் விமர்சனம்

இதுதொடர்பான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் #justasking என பதிவிட்டு வருகிறோம். தொடர்ச்சியாக அரசியல் சார்ந்த பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக மத்திய பாஜக அரசையும், அவர்களின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் பிரகாஷ் ராஜ் கருத்து வெளியிட்டு இருந்தார்.

 பாரம்பரிய உடையில் பிரகாஷ் ராஜ்

பாரம்பரிய உடையில் பிரகாஷ் ராஜ்

இந்நிலையில் தான் தற்போது அவர் இன்னொரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரகாஷ் ராஜ் நேபாள பாரம்பரிய உடை அணிந்து இருக்கும் 2 போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு போட்டோவில் அரசியல்வாதிகள் மக்களை பார்த்து கையசைப்பது போல் பிரகாஷ் ராஜ் உள்ளார். மேலும் இந்த பதிவில் ‛‛எனது தலைவரால் ஊக்கம் பெற்றுள்ளேன். ஹாய் கய்ஸ் ஏன் நீங்களும் இதை முயற்சித்து பார்க்க கூடாது'' என தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கூறுவது என்ன?

நெட்டிசன்கள் கூறுவது என்ன?

இதன்மூலம் நான் நேபாள பாரம்பரிய உடை அணிந்து உள்ளேன். இதுபோன்ற வித்தியாசமான உடைகளை நீங்களும் ஏன் அணிய கூடாது என பிரகாஷ் ராஜ் கேட்டுள்ளார். மேலும் எனது தலைவரால் ஊக்கம் பெற்றுள்ளேன் என கூறியதன் பின்னணியில் அவர் தலைவர் என பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதாவது பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த மக்களின் பாரம்பரிய உடைகள், தொப்பிகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மே 16ல் நேபாள நாட்டுக்கு சென்றார். புத்தர் பிறந்ததாக கருதப்படும் லும்பினிக்கும் சென் போதி மரத்துக்கும் நீர் ஊற்றினார். அங்கு நேபாள பிரதமர் ேஷர் பகதூர் தியூபாவை சந்தித்து 6 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதனை மனதில் வைத்து தான் நடிகர் பிரகாஷ் ராஜ் இத்தகைய பதிவை செய்துள்ளதாக இணையதளவாசிகள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பிரகாஷ் ராஜூக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Actor turned politician Prakash Raj, dressed in Nepali attire and says, "Hi, guy try this". Netizens have been commenting that Prakash Raj has embellished Prime Minister Narendra Modi's outfit with this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X